சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்! அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!
சென்ட்ரல்-கூடூர் இடையே பராமரிப்பு பணி காரணமாக மார்ச் 27, 29 தேதிகளில் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்ட்ரல்-கூடூர் இடையே பராமரிப்பு பணி காரணமாக மார்ச் 27, 29 தேதிகளில் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில் ரயில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணி காரணமாக அவ்வப்போது மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கம். அதன்படி சென்ட்ரல்-கூடூர் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சென்னை சென்ட்ரல் கூடூர் வழித்தடத்தில் அமைந்துள்ள பொன்னேரி கவரப்பட்டு ரயில் நிலையம் இடையே வருகின்ற மார்ச் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிற்பகல் 12 முதல் மாலை 5.20 மணி வரை 4 மணி நேரம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டைக்கு மார்ச் 27, 29 ஆகிய தேதிகளில் அதிகாலை 5.40, காலை 10.15, நண்பகல் 12.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டிக்கு காலை 10.30, காலை 11.35, மதியம் 1.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரலுக்கு மதியம் 1.00, பிற்பகல் 3.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களும், சூலூர்பேட்டை - சென்னை சென்ட்ரலுக்கு நண்பகல் 12.35, மதியம் 1.15, பிற்பகல் 3.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆவடி - சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 4.25 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும், சூலூர்பேட்டை - நெல்லூருக்கு காலை 8.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டிக்கு நண்பகல் 12.40, பிற்பகல் 2.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களும், கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரைக்கு பிற்பகல் 2.30, 3.15, மாலை 4.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
ஒரு பகுதி ரத்து
செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டிக்கு மார்ச் 27, 29 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே
ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டி - தாம்பரத்துக்கு பிற்பகல் 3 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்தாகிறது.