Annamalai vs Vijay: மைக்கில் பேசுவது மட்டும் அரசியல் அல்ல! விஜய்க்கு அண்ணாமலை பதிலடி!
தவெக தலைவர் விஜய் பாஜகவை தாக்கி பேசியிருந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் பாஜகவை தாக்கி பேசியிருந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Annamalai criticizes TVK leader Vijayதமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் இப்போதே தயாராகி வருகின்றன. இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் திடீரென டெல்லி சென்றிருந்தார். அவரும் கூட்டணி தொடர்பாக அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் பரவியது.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூட்டணி தொடர்பாக பேசிய அவர், ''தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. ஆகவே கூட்டணி குறித்து இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. கட்சிக்கான கூட்டணியாக இல்லாமல் தமிழக மக்களுக்கான கூட்டணியாக அமையும். கூட்டணி தொடர்பாக எனது சொந்த கருத்து ஏதும் இருக்காது. பாஜக தலைமை என்ன சொல்கிறதோ, அதை செய்வோம்''என்றார்.
தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் இன்று பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் மோதல் என்று கூறினார். மேலும் பிரதமர் மோடி பெயரை சொல்ல பயமில்லை என்றும் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களையும் மோடி வஞ்சிப்பதாகவும் விஜய் குற்றம்சாட்டி இருந்தார். விஜய்யின் குற்றசசாட்டு குறித்து அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
மோடி ஜீ... தமிழ்நாடுன்னா உங்களுக்கு அலர்ஜியா ஜீ? - விஜய் பளீச் பேச்சு
இது குறித்து பேசிய அண்ணாமலை, ''திமுக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் பாஜகவே முன்னிலையில் உள்ளது. திமுகவுக்கு எதிராக பாஜக ஏன் முன்னிலையில் இருக்கிறது என்றால் அதிகம் கைது செய்யப்பட்டவர்கள் பாஜகவினர் தான். யார் யாருக்கு எதிரி என்பதை வாக்காளர்கள் தான் முடிவு செய்வார்கள். காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணி காட்ட வேண்டும். பாஜக குறித்து பேச வேண்டிய தேவை இல்லை. மைக்கில் நின்று பேசுவது அரசியல் அல்ல; களத்தில் நின்று பேசுவது தான் அரசியல். பக்திமிக்கவர்களை பற்றி பேசினால் மைலேஜ் கிடைக்கும். அதனால் தான் விஜய் பிரதமர் மோடி குறித்து பேசுகிறார். குருவி படத்தின் மூலம் திமுகவின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை தொடங்கி வைத்ததே விஜய் தான்'' என்றார்.
மேலும் தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா அண்ணாமலையையும், பாஜகவையும் கடுமையாக தாக்கி பேசியிருந்தார். இது தொடர்பாக ஆதவ் அர்ஜூனாவின் பெயரை குறிப்பிடாமல் பேசிய அண்ணாமலை, ''நாமும் போராடுவது ஒரு அரசியல். கட்சி தொடங்கி 3 முறை வெளியே வருவதும் ஒரு அரசியல். ஒருவர் லாட்டரி விற்று முதலில் திமுகவில் இருந்தார். அதன்பிறகு விசிகவுக்கு சென்றார். இப்போது தவெகவையும் லாட்டரி கட்சியாக மாற்ற சென்றுள்ளார்'' என்றார்.
நீங்க தடுக்க நாங்க ஒன்னும் ஆறு இல்ல... சூறாவளி! ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த விஜய்