அமித்ஷாவிடம் பேசியது என்ன?.. எடப்பாடிக்கு அடுத்த 'ஷாக்' கொடுத்த செங்கோட்டையன்! பாஜகவின் டபுள் கேம்!

Published : Sep 09, 2025, 04:10 PM IST

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியது என்ன? என்பது குறித்து அதிமுகவின் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

PREV
14
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன்

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக கெத்தாக வலம் வந்த அதிமுகவின் நிலை இப்போது பார்க்கவே பரிதாபமாக உள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என பெரும் ஆளுமைகள் வலம் வந்த அதிமுகவில் பெரும் பிளவு ஏற்படுள்ளது. ஏற்கெனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சசிகலா, தினகரன், ஒபிஎஸ் ஆகியோர் எதிராக நிற்க இப்போது அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் எடப்பாடிக்கு எதிராக நிற்கிறார்.

24
செங்கோட்டையன் பதவி பறிப்பு

அதாவது எடப்பாடிக்கு எதிராக செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் அனைவரும் ஒன்றியணைய வேண்டும் என்று கூறியதுடன் ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை கட்சியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார். இதனால் கோபம் அடைந்த எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனின் பதவியை பறித்தார். செங்கோட்டையனுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.

டெல்லி சென்ற செங்கோட்டையன்

இதற்கிடையே செங்கோட்டையன் ஹரித்வார் செல்வதாக கூறி விட்டு டெல்லி சென்றார். அங்கு அவர் பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

34
அமித்ஷாவிடம் பேசியது என்ன?

அப்போது செங்கோட்டையன், ''உங்களிடம் ஹரித்வார் செல்வதாக கூறி விட்டு டெல்லி சென்றேன். அங்கு அமித்ஷாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதேபோல் நிதியமைச்சரையும் (நிர்மலா சீதாராமனையும்) சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்றைய அரசியல் சூழல் குறித்து அமித்ஷாவிடம் பேசினேன். அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதிமுக வலுவடைய வேண்டும் என்று அமித்ஷாவிடம் கூறினேன். அதிமுக வலிமை பெற தொடர்ந்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வேன்'' என்று தெரிவித்தார்.

ரயில்வே அமைச்சரையும் சந்தித்த செங்கோட்டையன்

தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து, ஈரோடு, சென்னை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தார். கட்சி பதவி பறிக்கப்பட்ட நிலையில், செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்து பேசியது எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

44
டபுள் கேம் ஆடுகிறதா பாஜக?

ஏனெனில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அனைவரும் செங்கோட்டையன் விவகாரத்தில் பாஜக தலைமை தலையிடாது என்று தெரிவித்து இருந்தனர். ஆனால் அமித்ஷா உடனடியாக செங்கோட்டையனை சந்தித்து பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபக்கம் எடப்பாடியிடம் பேசி விட்டு மறுபக்கம் எடப்பாடிக்கு எதிரானவர்களை பாஜக தூண்டி விட்டு டபுள் கேம் ஆடுகிறதா? என அரசியல் நிபுணர்கள் கேள்வியை முன்வைக்கின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories