திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த எடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராபின் (23). 10ம் வகுப்பு வரை படித்த ராபின், எலக்ட்ரீசியன் தொழில் செய்து வந்துள்ளார். மேலும் சென்னையில் ராப்பிடோ மூலம் பைக் டாக்சி ஓட்டி வந்துள்ளார். ராபின் சென்னையில் வேலை செய்து வந்த போது சென்னை அண்ணாநகரை சேர்ந்த திரிஷா (20) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் வேலைக்கு செல்லுமாறும் சில மாதங்கள் கழித்து திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர்.