கோவையில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில், தனியார் பெண் விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து இளம்பெண் ஒருவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பீளமேடு போலீசார் விசாரணை.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகில் தனியார் பெண் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் கல்லூரி செல்லும் பெண்கள் வேலைகளுக்கு செல்லும் பெண்கள் ஆகியோர் தங்கி உள்ளனர். இந்நிலையில் இரண்டாவது மாடியில் இருந்து திடீரென இளம்பெண் கீழே குதித்துள்ளார்.
24
தனியார் மருத்துவமனையில் அனுமதி
அவருக்கு கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு இளம்பெண் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆட்டோ மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
34
ஆண் நண்பருடன் வாக்குவாதம்
இது குறித்து பீளமேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அந்த இளம்பெண் ஊட்டியை சேர்ந்த ஷர்மிளா(21) என்பதும் கோவையில் உள்ள உணவு நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்துள்ளது. இவர் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். நேற்று மாலை இருவரும் பேசிக்கொண்டிருந்த போது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் கோபமடைந்த இளம்பெண் வேகமாக தனியார் விடுதிக்குள் சென்று சிறிது நேரத்தில் இளம்பெண் மாடியில் இருந்து கீழே குதித்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.