யார் இந்த அதிதி அசோக்? அவரது மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?

First Published Feb 6, 2023, 6:14 PM IST

ஆசிய யூத் விளையாட்டு, யூத் ஒலிம்பிக்ஸ் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடிய ஒரே இந்திய கோல்ஃப் வீராங்கனை என்ற சாதனையை படைத்தவர் கோல்ஃப் விளையாட்டு வீராங்கனை அதிதி அசோக்.

அதிதி அசோக்

கடந்த 1998 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி பெங்களூருவில் பிறந்தவர் அத்தி அசோக். இவர், ஒரு சிறந்த கோல்ஃப் விளையாட்டு வீராங்கனை. சிறு வயது முதலே கோல்ஃப் விளையாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. பொழுது போக்கிற்காக கோல்ஃப் விளையாட ஆரம்பித்த அதிதி அசோக் நாளடைவில் தொழில் ரீதியாகவே கோல்ஃப் விளையாடினார். 

அதிதி அசோக்

அதிதி அசோக் 12 ஆவது வயதில் ஆசிய பசிபிக் இன்விடேஷன் போட்டியில் கோல்ஃப் விளையாடினார். முதல் முறையாக 13 ஆவது வயதில் தொழில் முறை சுற்றுப்பயணத்தில் கோல்ஃப் விளையாடி அதில் வெற்றி வாகை சூடினார்.

அதிதி அசோக்

கடந்த 2011 ஆம் ஆண்டு கர்நாடகா ஜூனியர், சௌத் இந்தியன் ஜூனியர் சாம்பியன்ஷிப் டைட்டில் வென்றுள்ளார். 2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து 3 முறை தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் வென்றார். கடந்த 2014 ஆம் ஆண்டில் ஒரே நேரத்தில் ஜூனியர் மற்றும் சீனியருக்கான நடந்த போட்டியில் டைட்டில் வென்றார். 

அதிதி அசோக்

கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஆசிய யூத் விளையாட்டு, யூத் ஒலிம்பிக்ஸ் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடிய ஒரே இந்திய கோல்ஃப் வீராங்கனை என்ற சாதனையையும் அதிதி அசோக் படைத்தார். அதே போன்று தான் 2014 ஆம் ஆண்டு இதே சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். 

அதிதி அசோக்

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த ஹீரோ இந்திய ஓபன், 2017 ஆம் ஆண்டு நடந்த ஃபாத்திமா பிந்த் முபாரக் ஓபன் போன்றவற்றிலும் வெற்றி பெற்றார். கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் எல்பிஜிஏ வீராங்கனை என்ற பெருமையை அதிதி அசோக் பெற்றார்

அதிதி அசோக்

எல்பிஜிஏ என்பது, பெண்கள் தொழில்முறை கோல்ஃப் சங்கத்தைக் குறிக்கும். இது பெண் கோல்ஃப் வீராங்கனைகளுக்கான அமெரிக்க அமைப்பு. ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

அதிதி அசோக்

அதன் பிறகு இந்தியன் ஓபன் மற்றும் கத்தார் லேடிஸ் ஓபனில் அதிதி அசோக் 2 பட்டங்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிதி அசோக்கின் முதல் வருமானம் என்பது அது தொழில்முறை கோல்ஃப் விளையாட்டின் மூலம் தான். 

அதிதி அசோக்

அதன் பிறகு ஒவ்வொரு போட்டிகளிலும் அவர் பெறும் வெற்றிகளின் மூலம் வரும் பரிசுத் தொகைகள், ஒப்பந்தங்கள் மற்றும் பிராண்ட் பார்ட்னர்ஷிப் மூலமாக அவருக்கு வரும் வருமானம் என்று மொத்தமாக 1 முதல் 1.5 மில்லியன் டாலர் மதிப்பு ஆகும்.
 

அதிதி அசோக்

அதிதி அசோக் தனது தொழில் வாழ்க்கையில் ஆரம்ப காலகட்டத்தில் இருப்பதால், அவரது பேரும், புகழும் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாலும் அவர் பல ஒப்புதல் ஒப்பந்தங்களை ஏற்பதில்லை. எனினும் அவர் நன்கு அறியப்பட்ட கோல்ஃப் உபகரண பிராண்டான டைட்டிலிஸ்ட் ஆடைகளை மட்டும் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!