4 வெளிநாட்டு வீரர்களை களமிறக்கும் ஆர்சிபி – டாஸ் வென்று பவுலிங்: 3ஆவது வெற்றி பெறுமா?

By Rsiva kumar  |  First Published Apr 28, 2024, 3:40 PM IST

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 45ஆவது ஐபிஎல் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது பவுலிங் தேர்வு செய்துள்ளது.


அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஐபிஎல் 2024 தொடரின் 45ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் பவுலிங் தேர்வு செய்தார். இந்த சீசனில் ஆர்சிபி விளையாடிய 9 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று 7ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது.

இதே போன்று குஜராத் டைட்டன்ஸ் விளையாடிய 9 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 7ஆவது இடத்தில் உள்ளது. இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 3 போட்டிகளில் ஆர்சிபி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

Tap to resize

Latest Videos

ஆனால் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 14 போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற 32ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட்கோலி, ஃபாப் டூ ப்ளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், அஜத் படிதார், கேமரூன் க்ரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஸ்வப்னில் சிங், கரண் சர்மா, முகமது சிராஜ், யாஷ் தயாள்.

குஜராத் டைட்டன்ஸ்:

விருத்திமான் (சகா), சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், டேவிட் மில்லர், அஸ்மதுல்லா உமர்சாய், ராகுல் திவேதியா, ஷாருக்கான், ரஷீத் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், நூர் அகமது, மோகித் சர்மா.

click me!