IPL 2025: எழுதி வச்சிக்கோங்க; இந்த 3 வீரர்களும் சிஎஸ்கேவில் அசத்த போறாங்க; கப்பு கன்பார்ம்!

Published : Jan 28, 2025, 12:28 PM IST

ஐபிஎல் 2025 தொடர் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில், சிஎஸ்கே அணியில் கலக்கப்போகும் 3 வீரர்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
IPL 2025: எழுதி வச்சிக்கோங்க; இந்த 3 வீரர்களும் சிஎஸ்கேவில் அசத்த போறாங்க; கப்பு கன்பார்ம்!
IPL 2025: எழுதி வச்சிக்கோங்க; இந்த 3 வீரர்களும் சிஎஸ்கேவில் அசத்த போறாங்க; கப்பு கன்பார்ம்!

உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2025 தொடர் மார்ச் 21ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்க உள்ளது. 2025 ஐபிஎல் தொடரை தங்களுக்கு பிடித்தமான அணிதான் கைப்பற்றும் என ரசிகர்கள் இப்போதே சமூக வலைத்தளத்தில் முட்டி மோதத் தொடங்கி விட்டனர். இந்த முறை கோப்பையை வென்றே தீர வேண்டும் என ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன.

ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து சிறந்த அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது சிஎஸ்கே என அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ். மகேந்திர சிங் தோனி தலைமையில் 5 முறை ஐபில் கோப்பையை கையில் ஏந்தியுள்ள சிஎஸ்கே, இந்த முறையும் கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அதற்கேற்ப ஐபிஎல் மெகா ஏலத்தில் சிறந்த வீரர்களை சிஎஸ்கே அணி வாங்கி வைத்துள்ளது. 2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்காக சிறப்பாக விளையாடுவர்கள் என எதிர்பார்க்கப்படும் 3 வீரர்கள் குறித்து பார்க்கலாம்.

24
ருத்ராஜ் கெய்க்வாட்

ருத்ராஜ் கெய்க்வாட்: சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அந்த அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்து வருகிறார். பாஸ்ட் பவுலிங் மட்டுமின்றி ஸ்பின் பவுலிங்கையும் சிறப்பாக எதிர்கொள்ளும் அவர் சேப்பாக்கத்தில் 140 ஸ்ட்ரைக் ரேட்டில் 706 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த சீசனில் மட்டும் 14 போட்டிகளில் 583 ரன்கள் குவித்துள்ளார்.

கடந்த சீசனில் இவரது தலைமையில் களமிறங்கிய சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல முடியாமல் ஏமாற்றியது. இந்த முறை ருதுராஜ் கெய்க்வாட் தனது சிறப்பான கேப்டன்சி மற்றும் சிறப்பான பேட்டிங்கால் அணிக்கு கோப்பையை பெற்றுத் தருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஐபிஎல் 2025: 3 மேட்ச் வின்னிங் வீரர்கள் காயம்; கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவு!

34
ரவிச்சந்திரன் அஸ்வின்

ரவிச்சந்திரன் அஸ்வின்: நம்ம சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஐபிஎல்ல்லின் ஆரம்ப கட்டதில் சிஎஸ்கேவுக்காக விளையாடிய அவர் மீண்டும் மஞ்சள் ஜெர்சியில் சொந்த மண்ணில் விளையாட ஆவலுடன் இருக்கிறார். அனுபவம் வாய்ந்த வீரரான அஸ்வின், 212 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 180 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

ஓவருக்கு சராசரியாக 7.12 ரன்களே விட்டுக்கொடுத்துள்ளார். பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர் என்பதால் சிஎஸ்கேவின் துருப்புச்சீட்டாக அஸ்வின் பார்க்கப்படுகிறார். களத்தில் இவரின் சிறந்த ஆலோசனை கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு கண்டிப்பாக கைகொடுக்கும்.

44
நாதன் எல்லிஸ்

நாதன் எல்லிஸ்: ஆஸ்திரேலியா இளம் பாஸ்ட் பவுலரான நாதன் எல்லிஸ் சிஎஸ்கே அணியால் ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். வேகமாக பந்து வீசுவது மட்டுமின்றி தேவைக்கேற்ப ஸ்லோயர் பால்களை வீசி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் திறமை பெற்ற நாதன் எல்லிஸ், மெதுவான தன்மை கொண்ட சேப்பாக்கம் மைதானத்துக்கு பொருத்தமான பவுலராக இருப்பார்.

இவரது ஸ்லோ வேரியன்ட்கள் சென்னை பிட்ச்சில் நன்றாக கைகொடுக்கும். அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பிக்பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டில் நாதன் எல்லீஸ் 13 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2025 தொடங்கும் தேதியில் மாற்றமா? 'இம்பாக்ட் பிளேயர்' விதி நீக்கமா? முக்கிய அப்டேட்!

Read more Photos on
click me!

Recommended Stories