ஐபிஎல் 2025 சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 3 முக்கியமான வீரர்கள் காயம் அடைந்துள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக அமைநதுள்ளது.
ஐபிஎல் 2025: 3 மேட்ச் வின்னிங் வீரர்கள் காயம்; கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவு!
இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 21ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் ஐபிஎல் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 2025 ஐபிஎல் தொடரில் ஏராளமான அணிகள் இப்போதே தயாராகி வருகின்றன. ஒப்பனிங் யார் விளையாட வேண்டும்? மிடில் வரிசையில் யார் விளையாட வேண்டும்? என்பது குறித்த பட்டியலை தயார் செய்து வருகின்றன.
இந்நிலையில், நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி, ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்னதாக கடுமையான சவாலை எதிர்கொள்கிறது, ஏனெனில் அந்த அணியின் முக்கிய வீரர்கள் மூன்று பேர் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர. அதாவது அந்த அணியின் அதிரடி வீரர்கள் வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் மற்றும் பாஸ்ட் பவுலர் அன்ரிச் நார்ட்ஜே காயத்தால் அவதிப்படுகின்றனர்.
24
ரிங்கு சிங்
ரிங்கு சிங்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மிகவும் நம்பகமான பேட்ஸ்மேனும், ஐபிஎல் 2025க்காக அணியில் தக்கவைக்கப்பட்ட முதல் வீரருமான இந்திய அணியின் டி20 நட்சத்திர வீரர் ரிங்கு சிங், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கு முன்பு காயம் அடைந்தார். இந்தியாவின் அடுத்த இரண்டு டி20 போட்டிகளில் இருந்து அவர் ஏற்கனவே விலக்கப்பட்டுள்ளார், மேலும் அவரது உடற்தகுதி குறித்த இறுதி மருத்துவ அறிக்கைக்காக அணி காத்திருக்கிறது. அவர் நீண்ட காலம் இல்லாதது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தும்.
வெங்கடேஷ் ஐயர்: 2021 முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துருப்புச்சீட்டாக இருக்கும் வெங்கடேஷ் ஐயர், ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்காத்தா அணியால் ரூ.23.75 கோடிக்கு தக்க வைக்கப்பட்டார். ரஞ்சி டிராபி தொடரின்போது வெங்கடேஷ் ஐயர் காயம் அடைந்தார். அவரது காயத்தின் தன்மை அதிகமாக இருக்கும் என கூறப்படும் நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதனால் கவலை கொண்டுள்ளது.
44
அன்ரிச் நார்ட்ஜே
அன்ரிச் நார்ட்ஜே: தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே, கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பந்துவீச்சில் முக்கிய பங்கு வகித்தார். இவர் தென்னாப்பிரிக்க டி20 லீக்கின் போது காயமடைந்தார். இந்த காயத்ததால் அவர் தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் இருந்தும், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்தும் விலகி இருக்கிறார். இதனால் அவர் ஐபிஎல்லிலும் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது. இறுதிக்கட்ட ஓவரில் சிறப்பாக பந்துவீசும் அன்ரிச் நார்ட்ஜே இல்லாமல் போனால் கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவாகும்.