3வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்ரவர்த்தி.
இதேபோல் இங்கிலாந்து அணியிலும் கடந்த போட்டியில் இடம்பெற்ற வீரர்கள் அப்படியே தொடருகின்றனர். இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜோஸ் பட்லர் (கேப்டன்), பென் டக்கெட், பில் சால்ட், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத் மற்றும் மார்க் வுட்.
3வது டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் உள்ளிட்ட ஸ்டார் ஸ்போர்டஸ் குழும சேனல்களிலும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலும் இந்த போட்டியை காணலாம்.
ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா; வரலாற்று சாதனை!