ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா; வரலாற்று சாதனை; 'செம' மாஸ்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடும் வீரர்களை அடிப்படையாக வைத்து விருது வழங்கி வருகிறது. அதாவது டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் சிறந்த வீரரை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டின் சிறந்த டி20 வீரர் விருதை இந்திய பாஸ்ட் பவுலர் அர்ஷ்தீப் சிங் வென்றிருந்தார்.
இந்நிலையில், 2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை உலகின் நம்பர் 1 பவுலரான ஜஸ்பிரித் பும்ரா தட்டிச்சென்றுள்ளார். 2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் பும்ரா என்று ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சிறந்த டெஸ்ட் வீரர்கள் பரிந்துரை பட்டியலில் ஜோ ரூட், டிராவிஸ் ஹெட் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் போட்டி போட்ட நிலையில், 3 பேரையும் முறியடித்து பும்ரா விருதை தட்டித் தூக்கியுள்ளார்.
சிறந்த டெஸ்ட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா
ஜஸ்பிரித் பும்ரா 2024ம் ஆண்டு மட்டும் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 14.92 என்ற சராசரியுடன் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 2024ல் மொத்தமாக 357 ஓவர்களை வீசியுள்ள பும்ரா ஓவருக்கு 2.96 ரன்கள் என்று மிகச்சிறந்த சிக்கன விகிதத்தை பெற்றுள்ளார். 30.1 ஸ்டிரைக் ரேட்டில் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 2024 தொடக்கத்தில் கேப்டவுனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
ஆஷா போஸ்லேவின் பேத்தியுடன் டேட்டிங்கா? மனம் திறந்து பேசிய முகமது சிராஜ்!
ஐசிசி விருதுகள்
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மொத்தமாக 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மொத்தமாக 32 விக்கெட்டுகளை அறுவடை செய்திருந்தார். ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரர் விருதை பெறும் முதல் இந்தியா வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தான்.
ஐசிசி விருதை வென்ற விராட் கோலி
இதற்கு முன்பு எந்த ஒரு இந்திய பாஸ்ட் பவுலரும் ஐசிசி டெஸ்ட் விருதை வென்றதில்லை. இதற்கு முன்பு ராகுல் டிராவிட் 2024ம் ஆண்டிலும், கவுதம் கம்பீர் 2009ம் ஆண்டிலும், வீரேந்திர சேவாக் 2010ம் ஆண்டிலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2016ம் ஆண்டிலும், விராட் கோலி 2018ம் ஆண்டிலும் ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வென்றுள்ளனர். ஜசிசி டெஸ்ட் வீரர் விருதை வென்ற பும்ராவுக்கு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ்-பிரக்ஞானந்தா பலப்பரீட்சை; வெற்றிக்கனியை பறித்தது யார்?