ஐபிஎல் 2025: டிவியில் 10 செகண்ட் விளம்பரங்களுக்கு இத்தனை லட்சம் கட்டணமா? அடி ஆத்தி!
இந்தியாவில் ஆண்டுதோறும் இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் சிக்சர்கள் மழை, அடுத்தடுத்து விக்கெட் என பரபரப்பாக செல்வதால் உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் ஐபிஎல் தொடர்களை டிவியில் பார்த்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடர் வெறும் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுல்ல; இதை வைத்து ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடிக்கணக்கில் பிஸ்னஸ் நடந்து வருகிறது. ஒவ்வொரு போட்டியையும் பார்க்க பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரள்வதால் அதுவே பல நூறு கோடி வருமானங்களை ஈட்டிக்கொடுக்கிறது.
ஐபிஎல் 2025
ஐபிஎல் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் டிவி மற்றும் ஓடிடி தளங்களின் ஒவ்வொரு ஓவர்களுக்கு இடையிலும், விக்கெட் விழும்போதும், டிரிங்ஸ் பிரேக்கிங் என கிடைக்கும் நேரத்தில் எல்லாம் பல்வெறு நிறுவனங்களின் விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்யப்படும். சில வினாடிகள் மட்டுமே ஒளிபரப்பு செய்யபடும் இந்த விளம்பரங்களுக்கு லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
2025 ஐபிஎல் சீசன் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில், போட்டிகளின்போது டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் 10 வினாடி விளம்பரத்திற்கான கட்டணம் 9% முதல் 15% வரை உயர்ந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். அதாவது கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின்போது 10 வினாடி விளம்பர ஸ்லாட்டின் கட்டணம் ரூ.16.4 லட்சமாக இருந்த நிலையில், 2015 ஐபிஎல் சீசனில் இது ரூ.18 லட்சம் முதல் ரூ.19 லட்சம் வரை அதிகரித்துள்ளது.
ஐபிஎல் 2025 அணிகள்
அதாவது விளம்பர நிறுவனங்கள் ஐபிஎல் போட்டிகளின்போது டிவியில், ஓடிடியில் 10 வினாடிகள் விளம்பரத்துக்கு ரூ.19 லட்சம் கட்டணமாக கொடுக்க வேண்டும். இந்தியாவின் முன்னணி ஓடிடி தளங்கலான ஜியோ சினிமாவும், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரும் ஒன்றாக இணைந்து 'ஜியோ-ஸ்டார்' ஆக உருவெடுத்துள்ளன. 2025 ஐபிஎல் போட்டிகளை ஜியோ ஸ்டார் தான் டிவி மற்றும் ஓடிடியில் நேரலையாக ஒளிபரப்பு செய்ய உள்ளது.
ஜியோ-ஸ்டார் இணைப்புக்கு பிறகு ஐபிஎல் விளம்பர கட்டணங்கள் விலை உயர்வை சந்தித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மார்க்கெட்டர் மற்றும் பிசினஸ் நிபுணரான லாயிட் மத்தியாஸ் கூறுகையில், ''ஐபிஎல் தொடங்கியது முதலே டிவி மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு இடையே விளம்பரதாரர்களை ஈர்க்கும் போட்டி இருந்தது.
சிஎஸ்கே அணி
இப்போது ஜியோ-ஸ்டார் இணைக்கப்பட்டுள்ளதால் போட்டி நிறுவனங்கள் இல்லை என்பதால் இது நிர்ணயிப்பதே கட்டணமாக இருப்பதால் விளம்பர விலை உயர்ந்துள்ளது.
2024ம் ஆண்டு ஐபிஎல் சீசன் மக்களவை தேர்தலுக்கு முன்பு வந்ததால் பெரிய அளவில் விளம்பர கட்டணமிலலி. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு அதிக எதிர்பார்ப்பு நலவுவதால் விளம்பர கட்டணமும் உச்சம் தொட்டுள்ளது'' என்றார்.