ஐபிஎல் 2025: தெறிக்கவிடப்போகும் '4' வீரர்கள்; இவர்களின் அதிரடியை நிறுத்துவது கஷ்டம்!
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வருகிறது. ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் மாதம் 21ம் தேதி தொடங்க இருக்கிறது. அடுத்த மாதம் 19ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடங்க உள்ள நிலையில், ஐபிஎல் தொடரின் அட்டவணையை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுள்ளது.
ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளிலும் 4 வெளிநாட்டு வீரர்கள் விளையாட வாய்ப்பு வழங்கப்படும். இந்த வெளிநாட்டு வீரர்கள் பெரும்பாலும் அனுபவமிக்க, அதிரடி வீரர்களாக இருப்பதால் அந்த அணிகளின் வெற்றிக்கு இவர்களின் பங்கு மிகவும் முக்கியமாக உள்ளது. இதனால் ஐபிஎல்லில் சில வெளிநாட்டு வீரர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
ஐபிஎல் 2025 தொடரிலும் வெளீநாட்டு வீரர்கள் அசத்த தயாராக உள்ளனர். அந்த வகையில் வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 4 வீரர்கள் குறித்து பார்க்கலாம்.
டிராவிஸ் ஹெட்
இந்த பெயரை கேட்டாலே இந்திய ரசிகர்கள் தலைதெறிக்க ஓடுவார்கள். ஏனெனில் இந்தியாவுக்கு பல நேரங்களில் தலைவலியாக இருக்கும் டிராவிஸ் ஹெட் 50 ஓவர் உலகக்கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், அண்மையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழந்துள்ளர். ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதாராபத் அணியில் இடம்பெற்றுள்ள டிராவிஸ் ஹெட், ஐபிஎல்லிலும் தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.
2024 ஐபிஎல் தொடரில் ஒரு சதம், 4 அரைசதங்கள் என 567 ரன்கள் குவித்து சன் ரைசர்ஸ் ஹைதாராபத் அணி அரையிறுதி வரை செல்ல முக்கிய பங்கு வகித்தார். தற்போது சன் ரைசர்ஸ் ஹைதாராபத் அணி இவரை ரூ.14 கோடிக்கு தக்கவைத்துள்ள நிலையில், இந்த முறையும் டிராவிஸ் ஹெட் அதிரடியில் பட்டையை கிளப்புவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
'பிசிசிஐ தேர்வுக்குழுவில் இருக்க விரும்ப மாட்டேன்'; காரணத்தை சொன்ன அஸ்வின்!
ஜோஸ் பட்லர்
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் ஐபிஎல்லில் எப்போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நீண்ட காலம் விளையாடிய ஜோஸ் படலர் கடந்த சீசனில் 2 சதங்களுடன் 359 ரன்கள் எடுத்தார்.
இந்த முறை ராஜஸ்தான் அவரை விடுவித்ததால் குஜாரத் டைட்டனஸ் அணி ரூ.15.75 கோடிக்கு ஜோஸ் பட்லரை விலைக்கு வாங்கியது. ராஜஸ்தான் அணிக்காக நிகழ்த்திய வான வேடிக்கையை குஜாரத் அணியில் செய்வாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
டேவான் கான்வே
நியூசிலாந்து வீரரான டேவான் கான்வே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி அதிரடி வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். காயம் காரணமாக 2024 ஐபிஎல் சீசனில் விளையாடாத அவர் 2023 ஐபிஎல் சீசனில் 6 சதங்களுடன் 672 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார்.
இன்றைய காலக்கட்டத்தில் ஸ்பின் பந்துகளை சூப்பராக எதிர்கொள்ளும் முதல் வெளிநாட்டு வீரர் டேவான் கான்வே தான். சுழலுக்கு சாதகமான சென்னை பிட்ச்களில் டேவான் கான்வே பேட்டிங் பொருத்தமாக இருப்பதால் இம்முறை பட்டையை கிளப்புவாரா? என சிஎஸ்கே ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்தியா-இங்கிலாந்து 3வது டி20: சிக்ஸர் மழையில் நனைய தயாரா? ராஜ்கோட் பிட்ச் எப்படி?
ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க்
23 வயதான ஆஸ்திரேலியாவின் இளம் அதிரடி வீரரான ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க், டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் 2024 ஐபிஎல் சீசனில் ஏலத்தில் எடுக்கப்பட்டார். தான் விளையாடிய முதல் போட்டியிலேயே 4 அரை சதங்களுடன் 330 ரன்கள் குவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க். முதல் பந்தில் இருந்தே பயமின்றி அடித்து விளையாடுவது இவரின் பலமாகும். இந்த சீசனிலும் இவர் அதிரடி வேட்டையை தொடருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.