ஆஷா போஸ்லேவின் பேத்தியுடன் டேட்டிங்கா? மனம் திறந்து பேசிய முகமது சிராஜ்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழந்து வருபவர் முகமது சிராஜ். இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ள சிராஜ், அண்மையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சரிவர செயலபடவில்லை. இதனால் அடுத்த மாதம் சாம்பியனஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை.
முகமது சிராஜ் மூத்த பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி சனாய் போஸ்லேவுடன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. பாட்டியை போன்று பின்னணி பாடகியாக வலம் வரும் சனாய் போஸ்லே சில நாட்களுக்கு முன்பு தனது 23வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவர் குடும்பத்தினர், நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
முகமது சிராஜ்-சனாய் போஸ்லே
அதில் சனாய் போஸ்லே, முகமது சிராஜுடன் இருக்கும் புகைப்படமும் ஒன்று. முகமது சிராஜும், அவரும் சிரித்தபடி போஸ் கொடுப்பது போல் அந்த புகைப்படம் இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது. இதை வைத்து நெட்டிசன்கள் பல்வேறு வதந்திகளை கிளப்பி விட்டனர். அதாவது சிராஜும், சனாய் போஸ்லேவும் டேட்டிங் செய்கின்றனர் என்று வதந்தி தீயை கொளுத்திப் போட்டனர்.
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ்-பிரக்ஞானந்தா பலப்பரீட்சை; வெற்றிக்கனியை பறித்தது யார்?
முகமது சிராஜ்-சனாய் போஸ்லே புகைப்படம்
மேலும் சில நெட்டிசன்கள் சனாய் போஸ்லே இன்ஸ்ட்ராகிராம் பக்கததுக்கு சென்று அந்த புகைப்படத்துக்கு கீழே நீங்களும் சிராஜும் ஒருவரையொருவர் காதலிக்கிறீர்களா? இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறீர்களா? என்று தங்கள் இஷ்டத்துக்கு மனதில் தோன்றியதை எல்லாம் கமெண்ட்களாக பதிவு செய்தனர். இவ்வாறு பலரும் வதந்தியை கிளப்பி விட்டதால் முகமது சிராஜும், சனாய் போஸ்லேவும் விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
முகமது சிராஜ்
அந்த வகையில் சனாய் போஸ்லே முகமது சிராஜுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து 'மேரே பியாரே பாய்' (என் அன்பு சகோதரர்) என்று கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த முகமது சிராஜ். ''என் சகோதரி சனாய் போஸ்லேவை போல் யாரும் இல்லை. அவள் இல்லாமல் நான் எங்கும் இருக்க விரும்பவில்லை. என் சகோதரி சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை போன்றவள்'' என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் ''நாங்கள் இருவரும் டேட்டிங் செய்யவில்லை; காதலிக்கவும் இல்லை. நாங்கள் இருவரும் சகோதர, சகோதரிகள் எங்கள் உறவை களங்கப்படுத்தாதீர்கள்'' என்று சொல்லாமல் சொல்லது போல் சனாய் போஸ்லே, முகமது சிராஜ் ஆகிய இருவரின் விளக்கமும் அமைந்துள்ளது. மற்ற கிரிக்கெட் வீரர்களை போல் அல்லாமல் முகமது சிராஜ் எப்போதும் மற்ற நடிகைகள், பெண்களுடன் கிசுகிசுக்களில் சிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2025: டிவியில் 10 செகண்ட் விளம்பரங்களுக்கு இத்தனை லட்சம் கட்டணமா? அடி ஆத்தி!