ரஹ்மானுல்லா குர்பாஸ் 51 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து மிரட்டினார். மொத்தம் எட்டு சிக்ஸர்களும், எட்டு பவுண்டரிகளும் விளாசினார். குர்பாஸைத் தவிர, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (27), அஸ்மத்துல்லா உமர்சாய் (26) ஆகியோர் மட்டுமே இரட்டை லக்க ரன்களை எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர்களான குர்னூர் பிரார் மற்றும் ஹர்ஷ் துபே தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். நிதிஷ் குமார் ரெட்டிக்கு இரண்டு விக்கெட்டுகள் கிடைத்தன.
சுப்மன் கில் அசத்தல்
பின்பு இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவுக்கு தொடக்கம் ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது. கேப்டன் சுப்மன் கில்லுடன் 46 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரோஹித் சர்மா (16), ஆறாவது ஓவரில் ரன் அவுட் ஆனார். அதன்பிறகு, கில் - இஷான் கிஷன் (22 பந்துகளில் 34) ஜோடி 70 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடியை ரஷித் கான் பிரித்தார். 13-வது ஓவரில் கிஷனை அவர் போல்டாக்கினார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயரால் (12) பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் இந்தியா 142 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.