Rahmanullah Gurbaz: மின்னல் வேக சதம்.. டி வில்லியர்ஸ் சாதனையை தகர்த்த குர்பாஸ்.. மாஸ் பேட்டிங்!

Published : Jun 13, 2026, 09:35 PM IST

Rahmanullah Gurbaz: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 48 பந்துகளில் சதம் விளாசிய ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

PREV
13
இந்தியா, ஆப்கானிஸ்தான் முதல் ஓடிஐ

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் போட்டியில், ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் தனியாளாக நின்று ஒரு மிரட்டல் சதம் அடித்தார். கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி மற்றும் அஜ்மத்துல்லா ஒமர்சாய் ஆகியோரின் பங்களிப்புடன், ஆப்கானிஸ்தான் அணி 194 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. மழையால் போட்டி 25 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் தற்போது, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

தனி ஆளாக போராடிய குர்பாஸ்

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீச, ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், மறுமுனையில் நின்ற குர்பாஸ் மட்டும் இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இப்ராஹிம் ஜத்ரான், அடல், ரஹ்மத் ஷா போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனாலும், குர்பாஸ் மட்டும் இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக விளங்கினார்.

23
சதமடித்து அசத்திய குர்பாஸ்

தொடர்ந்து அதிரடியாக ஆடிய குர்பாஸ், ஒரு கட்டத்தில் சதம் அடித்து அசத்தினார். அவர் வெறும் 51 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 102 ரன்களை விளாசினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 200 ஆக இருந்தது. குர்பாஸைத் தவிர, கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி 27 ரன்களும், அஜ்மத்துல்லா ஒமர்சாய் 27 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் ஹர்ஷ் துபே மற்றும் குர்னூர் பிரார் ஆகியோர் அறிமுக வீரர்களாகக் களமிறங்கினர். அறிமுக போட்டியிலேயே இருவரும் அசத்தலாகப் பந்துவீசி, தலா மூன்று விக்கெட்டுகளைச் சாய்த்து, மொத்தமாக ஆறு விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

33
குர்பாஸின் அசாத்திய சாதனை

48 பந்துகளில் தனது சதத்தை விளாசிய குர்பாஸ் ஆப்கானிஸ்தான் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு, 2010-ல் ஸ்காட்லாந்துக்கு எதிராக முகமது ஷஷாத் மற்றும் 2012-ல் நெதர்லாந்துக்கு எதிராக கரீம் சாதிக் ஆகியோர் 72 பந்துகளில் சதம் அடித்ததே ஆப்கானிஸ்தான் அணியின் அதிவேக ஒருநாள் சதமாக இருந்தது. 

அந்த 14 ஆண்டுகால சாதனையை குர்பாஸ் தற்போது தகர்த்துள்ளார். குர்பாஸின் இந்த மிரட்டலான இன்னிங்ஸ் ஆப்கானிஸ்தான் சாதனை மட்டுமன்றி, ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்திய அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக சதமாக பதிவாகியுள்ளது.

ஷாகித் அப்ரிடிக்கு அடுத்த இடம்

கடந்த 2005-ஆம் ஆண்டு கான்பூரில் நடந்த போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சை சிதறடித்து பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி 45 பந்துகளில் சதமடித்ததே இன்றும் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, 2013-ல் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் ஃபாக்னர் மற்றும் 2015-ல் தென்னாப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் இந்தியாவுக்கு எதிராக 57 பந்துகளில் அடித்த சதங்களை முறியடித்து, தற்போது குர்பாஸ் (48 பந்துகள்) இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories