T20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் நீக்கம்?.. நிரந்தர இடம் பிடிக்கும் இளம் அதிரடி வீரர்!

Published : Jan 31, 2026, 08:09 PM IST

சஞ்சு சாம்சன் வாய்ப்புகளையெல்லாம் கோட்டை விட்டாலும் இஷான் கிஷன் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை மிக அற்புதமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். இந்த தொடரில் ஏற்கெனவே அதிரடி அரை சதம் விளாசி இருந்த இஷான் கிஷன் இன்றைய போட்டியிலும் சூப்பர் அரை சதம் விளாசியுள்ளார்.

PREV
14
கடைசி டி20 போட்டியிலும் சொதப்பிய சஞ்சு சாம்சன்

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் ஏமாற்றம் அளித்தார். திருவனந்தபுரம், கிரீன்ஃபீல்ட் ஸ்டேடியத்தில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணிக்காக களமிறங்கிய சஞ்சு சாம்சன் வெறும் ஆறு ரன்கள் மட்டுமே எடுத்து லாக்கி பெர்குசன் பந்தில் கேட்ச் ஆனார்.

24
சொந்த மண்னில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

சொந்த மண்ணில் சஞ்சுவின் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். ஆனால் சொந்த மண்ணில் விளையாடிய முதல் போட்டியிலேயே சஞ்சு சாம்சன் சொதப்பியுள்ளார். சஞ்சு சாம்சன் ஆட்டத்தை காண வந்த கேரள ரசிகர்கள் அவர் விரைவில் அவுட் ஆனதால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். 

முன்னதாக, இந்திய அணி கடைசி டி20 போட்டியில் மூன்று மாற்றங்களுடன் களமிறங்கியது. இஷான் கிஷன், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அணிக்குத் திரும்பினர். ஹர்ஷித் ராணா, ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது.

34
நியூசிலாந்து தொடர் முழுவதும் சஞ்சு சாம்சன் மோசம்

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் முழுவதும் சஞ்சு சாம்சன் படுமோசமாக விளையாடியுள்ளார். பேட்டிங் மட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கிலும் கடுமையாக சொதப்பினார். இந்த தொடரின் 5 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் கூட அவர் 25 ரன்களை தாண்டவில்லை. 

விக்கெட் கீப்பிங்கிலும் பந்துகளை சரிவர பிடிக்காமல் திணறினார். அதுவும் பவர்பிளே முடிவதற்குள் சஞ்சு சாம்சன் அவுட் ஆன விதம் பெரிதும் விவாதப்பொருளாகியுள்ளது.

தன்னம்பிக்கையில்லாத சஞ்சு சாம்சன்

கொஞ்சம் கூட தன்னம்பிக்கையின்றி விளையாடும் சஞ்சு சாம்சன், எதிரணி பவுலர்களுக்கு எளிதாக தனது விக்கெட்டை தாரைவார்த்தார். டி20 உலகக்கோப்பை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்றுள்ளார். இந்திய அணியில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் என இரண்டு விக்கெட் கீப்பர்கள் உள்ளனர்.

44
நீக்கப்படும் சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் கோட்டை விட்டாலும் இஷான் கிஷன் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை மிக அற்புதமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். இந்த தொடரில் ஏற்கெனவே அதிரடி அரை சதம் விளாசி இருந்த இஷான் கிஷன் இன்றைய 5வது மற்றும் கடைசி டி20 போட்டியிலும் சூப்பர் அரை சதம் விளாசியுள்ளார். 

இதனால் டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சனை நீக்கி விட்டு இஷான் கிஷனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

நிரந்தர இடம் பிடிக்கும் இஷான் கிஷன்

இந்திய அணியின் நிரந்தர டி20 பேட்ஸ்மேன் திலக் வர்மா காயம் அடைந்ததால் அவரது இடத்தில் விளையாடிய இஷான் கிஷன் நிரந்தர இடம்பிடிக்க முழு தகுதியும் பெற்று விட்டார். ஆகவே டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக இஷான் கிஷன் நிரந்தரமாக இடம்பெறுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

Read more Photos on
click me!

Recommended Stories