டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஐசிசி டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக வரவிருக்கும் டி20 உலகக் கோப்பை 2026 தொடரிலிருந்து பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார். இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறவுள்ள இந்த மெகா தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா இறுதி செய்துள்ளது.
25
மிட்செல் மார்ஷ் கேப்டன்
2021 டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியை மிட்செல் மார்ஷ் வழிநடத்த உள்ளார்.ஐசிசி இணையதளத்தின்படி, பேட் கம்மின்ஸ் தனது முதுகுப் பகுதி காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால், இந்த தொடரில் பங்கேற்க மாட்டார். டாப்-ஆர்டர் பேட்ஸ்மேனான மேத்யூ ஷார்ட்டும் 15 பேர் கொண்ட அசல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பென் ட்வார்ஷூயிஸ் மற்றும் மேத்யூ ரென்ஷா ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
35
டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலிய அணி
டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி இதோ: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கொனோலி, டிம் டேவிட், பென் ட்வார்ஷூயிஸ், கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மேத்யூ குஹ்னெமன், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ரென்ஷா, மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா.
ஆஸ்திரேலிய அணியின் தேர்வாளர் டோனி டோட்மெய்ட், ட்வார்ஷூயிஸ் மற்றும் ரென்ஷா ஆகியோர் உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர், ''பேட் கம்மின்ஸ் தனது முதுகு காயத்திலிருந்து மீள அதிக நேரம் தேவைப்படுவதால், அவருக்கு பதிலாக பென் ஒரு சிறந்த மாற்று வீரராக இருப்பார். அவர் இடது கை வேகப்பந்து வீச்சு, டைனமிக் ஃபீல்டிங் மற்றும் கடைசி வரிசை பேட்டிங் என பலம் சேர்ப்பார்.
மேட் ரென்ஷா நல்ல பார்ம்
பந்தை நல்ல வேகத்தில் ஸ்விங் செய்யும் அவரது திறனும், புத்திசாலித்தனமான பந்துவீச்சு வேறுபாடுகளும், நாங்கள் எதிர்பார்க்கும் சூழலுக்கும், அணியின் ஒட்டுமொத்த கட்டமைப்புக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று கூறியுள்ளார். மேலும் மேட் ரென்ஷா சமீபத்தில் அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து புல்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்காக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பல பங்களிப்புகளை செய்துள்ளார்.
55
ஆஸ்திரேலியா முதல் போட்டி யாருடன்?
இலங்கையில் நடைபெறும் லீக் சுற்றுகளில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சூழல் எதிர்பார்க்கப்படுவதால், டாப் ஆர்டர் சீராக இருக்கும் நிலையில், மிடில் ஆர்டருக்கு மேட் ரென்ஷா கூடுதல் பலம் சேர்ப்பார் என்று நாங்கள் கருதுகிறோம். டிம் டேவிட் தொடரின் ஆரம்ப கட்டத்தில் தனது விளையாட்டுக்குத் திரும்பும் திட்டத்தை நிறைவு செய்வார்" என்று டோட்மெய்ட் மேலும் கூறினார்.
2026 டி20 உலகக் கோப்பையின் குரூப் பி பிரிவில் அயர்லாந்து, ஜிம்பாப்வே, இலங்கை மற்றும் ஓமன் ஆகிய அணிகளுடன் ஆஸ்திரேலியா இடம்பெற்றுள்ளது. பிப்ரவரி 11 அன்று கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் அயர்லாந்துக்கு எதிராக தனது முதல் போட்டியை ஆஸ்திரேலியா விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.