விராட் கோலி இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் கணக்கை செயலிழக்கச் செய்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும், மீண்டும் வரச்சொல்லி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கமானது இன்று திடீரென முடங்கியதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உலக அளவில் பிரபலமான இன்ஸ்டாகிராம் செயலியில் அதிக பாலோயர்களைக் கொண்ட பிரபலங்களின் பட்டியலில் டாப் 10ல் விராட் கோலியும் ஒருவர். மேலும் அதிக பாலோயர்களைக் கொண்ட விளையாட்டு வீரர் என்ற பட்டியலில் 3வது இடத்தில் கோலி உள்ளார். இவரை மொத்தமாக 27.4 கோடி ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.
23
கோலிக்காக கதறிய ரசிகர்கள்
இந்த நிலையில் திடீரென அவரது இன்ஸ்டா பக்கம் முடங்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இது நடைபெற்றதா அல்லது விராட் கோலி தாமாக தனது அக்கவுண்டை நீக்கிவிட்டாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அவரது மனைவி அனுஷ்காவின் சமூக வலைதளப் பதிவின் கமெண்ட்ஸ் செக்சனில் விராட் கோலியை மீண்டும் வரச் சொல்லுங்கள் என கருத்துகளை பகிரத் தொடங்கினர்.
33
லண்டனில் கோலி
தனது குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள ஏதுவாக லண்டனில் குடியியேறியுள்ள கோலி கிரிக்கெட் போட்டி இருக்கக்கூடிய நாட்களில் மட்டும் இந்தியாவுக்கு வந்து செல்கிறார். ஆரம்ப காலத்தில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்த கோலி கொஞ்சம் கொஞ்சமாக தனது தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதை நிறுத்திக் கொண்டார். தற்போது அவர் வணிக ரீதியிலான கருத்துகளை மட்டுமே பகிர்ந்து வருகிறார். இதனிடையே திடீரென முடங்கிய கோலியின் கணக்கு சிறிது நேரம் கழித்து மீண்டும் செயல்படத் தொடங்கியதால் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.