IND vs NZ 4வது T20i: விசாகப்பட்டினத்தில் நடந்த நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 216 ரன்கள் இலக்கை இந்திய பேட்ஸ்மேன்களால் எட்ட முடியவில்லை.
நியூசிலாந்து நான்காவது டி20 போட்டியில் இந்தியாவை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. விசாகப்பட்டினத்தில் நடந்த இப்போட்டியில் கிவி வீரர்கள் சிறப்பாக விளையாடி தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தனர். 216 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்திய பேட்ஸ்மேன்களால் எட்ட முடியவில்லை. அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் சேஸிங்கில் தோல்வியடைந்தனர். போட்டியின் ஹைலைட்ஸை பார்ப்போம்.
25
டாஸ் வென்ற இந்தியா
விசாகப்பட்டினம் மைதானத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஆனால் அது தவறான முடிவாக அமைந்தது. நியூசிலாந்து தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தனர். டெவோன் கான்வே 44 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த, அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன.
35
215 ரன்கள் சேர்த்த நியூசிலாந்து
டிம் சைஃபர்ட் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் எடுத்தார். டேரில் மிட்செல் 18 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார். கிளென் பிலிப்ஸ் 24 ரன்கள் எடுத்தார். கிவி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
216 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் வெளியேறினார். சஞ்சு சாம்சன் 24 ரன்களில் ஆட்டமிழந்தது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ரிங்கு சிங் 39 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்டியா 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
55
சிவம் துபே அதிரடி வீண்
82 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், சிவம் துபே களமிறங்கி அதிரடி காட்டினார். இஷ் சோதி ஓவரில் 29 ரன்கள் விளாசினார். அவர் ஆட்டத்தின் போக்கை மாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரன் அவுட் ஆனார். 23 பந்துகளில் 7 சிக்ஸர்களுடன் 65 ரன்கள் எடுத்தார். ஆனால், இந்தியாவை வெற்றி பெற வைக்க முடியவில்லை. இந்திய அணி 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.