தொடர்ந்து பேசிய ரவி சாஸ்திரி, ''ஜஸ்பிரித் பும்ரா இருக்கிறார். ஹர்திக் பாண்ட் யா இருக்கிறார். அவர்கள் தற்போது சிறப்பான ஃபார்மில் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஹர்திக்கின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பங்களிக்கும் அவரது திறன் முக்கியமானது.
சிவம் துபே நன்றாக வளர்ந்து வருகிறார். திலக் வர்மா ஒரு அற்புதமான வீரர் என்பதால், அவர் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று இந்தியா நம்பும். மேலும், ஒரு இடது கை வீரராக, டாப் ஆர்டரில் அவர் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார்'' என்று கூறியுள்ளார்.
வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல்
மேலும் இந்திய அணியிடம் சரியான அளவில் சுழற்பந்துவீச்சுத் திறமை இருப்பதாகவும், அணிக்கு சரியான சமநிலையையும், வீரர்களுக்கு சரியான இடங்களையும் வழங்குவது பட்டத்தை தக்கவைக்க உதவும் என்றும் ரவி சாஸ்திரி சுட்டிக்காட்டினார்.
''சுழற்பந்துவீச்சு ஒரு ஒருங்கிணைந்த பங்களிப்பைச் செய்யும் என்று நான் நினைக்கிறேன். அந்த சுழற்பந்துவீச்சுத் துறையில் இந்தியாவிடம் போதுமான பலம் உள்ளது. வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சில் உள்ள பன்முகத்தன்மை, சரியான இடங்களில் வீரர்கள் மற்றும் சமநிலை ஆகிய