இதையடுத்து இவர்கள் இருவருக்கும் மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ரீஸ் டாப்ளிக்கு மாற்றாக தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் வைன் பார்னெல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வைன் பார்னெல் சர்வதேச கிரிக்கெட்டில் 6 டெஸ்ட், 73 ஒருநாள் மற்றும் 56 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். ஐபிஎல்லில் 26 போட்டிகளில் ஆடி 26 விக்கெட் வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல்லில் நல்ல அனுபவம் கொண்ட பார்னெலை ரூ.75 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது ஆர்சிபி அணி.. பேட்ஸ்மேனான ரஜத் பட்டிதாருக்கு மாற்றாக ஃபாஸ்ட் பவுலரான வைஷாக் விஜய் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.