IPL 2023: 10 ஓவர் வரையிலும் கேகேஆர் கண்ட்ரோல் எங்ககிட்ட தான் இருந்துச்சு; இவரால் தோற்றோம் - டூபிளெசிஸ்!

First Published | Apr 7, 2023, 5:17 PM IST

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணமே ஷர்துல் தாக்கூர் தான் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூபிளெசிஸ் கூறியுள்ளார்.

கேகேஆர் - ஆர்சிபி

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 9ஆவது போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நிலைத்து நின்று ஆடி 57 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் கேகேஆர் அணி 11.3 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 89 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

Tap to resize

பாப் டூபிளெசிஸ்

அதன் பிறகு தான் ஷர்துல் தாக்கூர் மற்றும் ரிங்கு சிங் இருவரும் ஜோடி சேர்ந்து ஆர்சிபி அணியின் பவுலர்களை திணறவிட்டனர். ஷர்துல் தாக்கூர் 29 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 

கொல்கத்தா ஈடன் கார்டன்

ரிங்கு சிங், 33 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகளுடன் 46 ரன்களில் வெளியேறினார். இறுதியாக கேகேஆர் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது.

விராட் கோலி

பின்னர், 205 ரன்களை கடின இலக்காகக் கொண்ட ஆர்சிபி அணிக்கு விராட் கோலி - ஃபாஃப் டுப்ளெசிஸ் இணைந்து முதல் 4 ஓவரில் அடித்து ஆடி 42 ரன்களை குவித்தனர். 5வது ஓவரை வீசிய சுனில் நரைன், விராட் கோலியை 21 ரன்களுக்கு வீழ்த்தி பிரேக் கொடுக்க, அடுத்த ஓவரிலேயே டுப்ளெசிஸை 23 ரன்களுக்கு வீழ்த்தினார் வருண் சக்கரவர்த்தி.

ரிங்கு சிங்

அதன் பிறகு வந்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஆர்சிபி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்து 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சுயாஷ் ஷர்மா

பந்து வீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்டும், சுயாஷ் ஷர்மா 3 விக்கெட்டும், சுனில் நரைன் 2 விக்கெட்டும், ஷர்துல் தாக்கூர் ஒரு விக்கெட்டும் கைபற்றினர். இந்தப் போட்டியில் ஷர்துல் தாக்கூருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ஷர்துல் தாக்கூர்

தோல்விக்குப் பிறகு பேசிய ஆர்சிபி கேப்டன் பாப் டூபிளெசிஸ் கூறியிருப்பதாவது: எங்களது தோல்விக்கு முக்கிய காரணமே ஷர்துல் தாக்கூர் தான். ஃபர்ஸ்ட் 10 ஓவர் வரையிலும் கேகேஆரின் முழு கண்ட்ரோல் எல்லாம் எங்க கிட்டதான் இருந்துச்சு. ஆனால், அதன் பிறகு தான் ஆட்டமே மாறிடுச்சு. அதற்கெல்லாம் ஷர்துல் தாக்கூர் தான் காரணம். அவரது விக்கெட்டை எடுக்கவே தாமதம் ஆகிடுச்சு.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

எங்களிடம் இருந்த போட்டியை அவர் கைவசம் கொண்டு சென்றார். அதே போன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினர். எங்களது பேட்டிங் மிக மோசமாக இருந்தது. நாங்கள் குறைந்தது 160 ரன்களாவது எடுத்திருக்க வேண்டும். இருந்தாலும் நாங்கள் அடைந்த தோல்வியிலிருந்து தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சி செய்வோம் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஏற்கவே மும்பைக்கு எதிரான முதல் போட்டிய்ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றிருந்தது. வரும் 10 ஆம் தேதி லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டி பெங்களூரு மைதானத்தில் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos

click me!