ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 31 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், ஹோம் மைதானங்களில் நடந்த போட்டிகளில் அந்தந்த அணிகள் தான் அதிகளவில் வெற்றி கண்டுள்ளன. அதிலும் ஒரு சில அணிகள் உதாரணத்திற்கு டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் தோல்வி அடைந்துள்ளன.
GT vs CSK
அதுமட்டுமின்றி இதுவரையில் நடந்த 9 போட்டிகளில் டாஸ் ஜெயித்த அணிகள் எல்லாமே பீல்டிங் தேர்வு செய்து விளையாடியுள்ளது. அதுமட்டுமின்றி 2 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று 2 போட்டியிலும் விளையாடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி 2 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது.
Gill
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தென் ஆப்பிரிக்கா வீரர் எய்டன் மார்க்ரம் இன்று நடக்கும் போட்டியின் மூலம் அணியில் இணைந்துள்ளார். அந்த அணியின் கேப்டன் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஹோம் மைதானத்தில் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியது.
Image credit: PTI
டெல்லி கேபிடல்ஸ் அணியில் ரிஷப் பண்ட் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விலகிய நிலையில் டேவிட் வார்னர் கேப்டனாக விளையாடி வருகிறார். அந்த அணியில் இடம் பெற்றுள்ள பிருத்வி ஷா தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், டெல்லி கேபிடல்ஸ் பேட்டிங்கில் தடுமாறி தோல்வியை தழுவி வருகிறது.
பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் பலம் வாய்ந்த அணியாக விளங்கும் ராஜதான் ராயல்ஸ் அணி 2ஆவது போட்டியில் போராடி தான் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் டைட்டன்ஸ் - அகமதாபாத் ஹோம் மைதானம்
கடந்த மாதம் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 2023 ஆம் ஆண்டுக்கான 16ஆவது ஐபிஎல் சீசனின் முதல் ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.
டாஸ்: குஜராத் டைட்டன்ஸ் டாஸ் ஜெயித்து பீல்டிங் தேர்வு செய்தது.
பஞ்சாப் கிங்ஸ் - மொஹாலி ஹோம் மைதானம்
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது மழை குறுக்கீடு இருந்ததால், டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி பஞ்சாப் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் ஜெயித்து பீல்டிங் தேர்வு செய்தது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - லக்னோ ஹோம் மைதானம்
ஏப்ரல் 1 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ்: டெல்லி கேபிடல்ஸ் டாஸ் ஜெயித்து பீல்டிங் தேர்வு செய்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ஹைதராபாத் ஹோம் மைதானம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடந்த 4 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 72 வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
டாஸ்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டாஸ் ஜெயித்து பீல்டிங் தேர்வு செய்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - பெங்களூரு ஹோம் மைதானம்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்த 5 ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ்: ராயல் சேலஞ்சர்ஸ் டாஸ் ஜெயித்து பீல்டிங் தேர்வு செய்தது
சென்னை சூப்பர் கிங்ஸ் - சென்னை ஹோம் மைதானம்
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக நடந்த 6ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ்: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் டாஸ் ஜெயித்து பீல்டிங் தேர்வு செய்தது.
டெல்லி கேபிடல்ஸ் - டெல்லி ஹோம் மைதானம்
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடந்த 7ஆவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
டாஸ்: குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் ஜெயித்து பீல்டிங் தேர்வு செய்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் - கவுகாத்தி ஹோம் மைதானம்
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த 8ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
டாஸ்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் ஜெயித்து பீல்டிங் தேர்வு செய்தது.
Image credit: PTI
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடந்த 9ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
டாஸ்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு டாஸ் ஜெயித்து பீல்டிங் தேர்வு செய்தது.