IPL 2023: அதிக உடல் எடையால் விமர்சனத்திற்கு உள்ளான ஷர்துல் தாக்கூர் இன்று ஆட்டநாயகன்!

First Published | Apr 7, 2023, 12:39 PM IST

கிரிக்கெட்டில் அறிமுகமாவதற்கு முன்னதாக அதிக உடல் எடையால் விமர்சனத்திற்கு உள்ளாகி பல சோதனைகளை கடந்து தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் சாதனை படைத்து வருகிறார்.

Shardul Thakur who has come under criticism for being overweight, is the man of the match for KKR
ஷர்துல் தாக்கூர்

கடந்த 1991 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியில் பிறந்தவர் இந்திய கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாக்கூர். தற்போது 31 வயதாகும் இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.
 

Shardul Thakur who has come under criticism for being overweight, is the man of the match for KKR
ஷர்துல் தாக்கூர்

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக ஒரு நாள் தொடரில் அறிமுகமானார். இதே போன்று 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 தொடரில் அறிமுகமானார்.
 


ஷர்துல் தாக்கூர்

பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது 2006 ஆம் ஆண்டு நடந்த ஹரீஷ் ஷீல்டு டிராபியில் ஷர்துல் தாக்கூர் ஒரே ஓவரில் 6 சிக்ஸர் விளாசினார். அதோடு, ஒரு ஓவரில் 6 சிக்ஸர் விளாசிய 3ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். 

ஷர்துல் தாக்கூர்

கடந்த 2013 ஆம் ஆண்டு  ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக இடம் பெற்றார். அதிக உடல் எடையின் காரணமாக பலராலும் விமர்சனத்திற்கு உள்ளானவர் ஷர்துல் தாக்கூர். இதையடுத்து, தாக்கூருக்கு வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் பயிற்சி கொடுக்கவே, உடல் எடையை குறைத்துள்ளார்.
 

ஷர்துல் தாக்கூர்

கடந்த 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் ரூ.20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அந்த சீசனும், அதற்கு அடுத்த சீசனும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த ஷர்துல் தாக்கூர், அந்த அணியில் விளையாடவில்லை.

ஷர்துல் தாக்கூர்

இதையடுத்து, 2017 ஆம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார். தொடர்ந்து, 2018 - 2021 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார். 2022 ஆம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். தற்போது கொல்கத்தா அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.
 

ஷர்துல் தாக்கூர்

நேற்று நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 29 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் உள்பட 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ஷர்துல் தாக்கூர்

மேலும், பந்து வீச்சில் 2 ஓவர்கள் ஒரு விக்கெட் இழந்து 15 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது..

ஷர்துல் தாக்கூர்

கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி ஷர்துல் தாக்கூருக்கும், மித்தாலி பருல்கருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடரைத் தொடர்ந்து திருமணம் நடக்க இருந்தது.

ஷர்துல் தாக்கூர்

ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்கு அவர்களது திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி ஷர்துல் தாக்கூர் மற்றும் மித்தாலி பருல்கர் திருமணம் நடந்தது.

Latest Videos

click me!