IPL 2023: யாரு இந்த சுயாஷ் ஷர்மா? அறிமுக போட்டியிலேயே விக்கெட் மழையாக பொழிந்த 19 வயதேயான சுயாஷ்!

Published : Apr 07, 2023, 10:51 AM IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற் பந்து வீச்சாளராக அறிமுகமான சுயாஷ் ஷர்மா 4 ஓவர்களில் 3 விக்கெட் கைப்பற்றி கேகேஆர் அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார்.  

PREV
111
IPL 2023: யாரு இந்த சுயாஷ் ஷர்மா? அறிமுக போட்டியிலேயே விக்கெட் மழையாக பொழிந்த 19 வயதேயான சுயாஷ்!
ஐபிஎல் 2023 - சுயாஷ் ஷர்மா

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 9ஆவது போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

211
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஷர்துல் தாக்கூர்

அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நிலைத்து நின்று ஆடி 57 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் கேகேஆர் அணி 11.3 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 89 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
 

311
ஷர்துல் தாக்கூர்

அதன் பிறகு தான் ஷர்துல் தாக்கூர் மற்றும் ரிங்கு சிங் இருவரும் ஜோடி சேர்ந்து ஆர்சிபி அணியின் பவுலர்களை திணறவிட்டனர். ஷர்துல் தாக்கூர் 29 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 

411
சுயாஷ் ஷர்மா

ரிங்கு சிங், 33 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகளுடன் 46 ரன்களில் வெளியேறினார். இறுதியாக கேகேஆர் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது.

511
சுயாஷ் ஷர்மா

பின்னர், 205 ரன்களை கடின இலக்காகக் கொண்ட ஆர்சிபி அணிக்கு விராட் கோலி - ஃபாஃப் டுப்ளெசிஸ் இணைந்து முதல் 4 ஓவரில் அடித்து ஆடி 42 ரன்களை குவித்தனர். 5வது ஓவரை வீசிய சுனில் நரைன், விராட் கோலியை 21 ரன்களுக்கு வீழ்த்தி பிரேக் கொடுக்க, அடுத்த ஓவரிலேயே டுப்ளெசிஸை 23 ரன்களுக்கு வீழ்த்தினார் வருண் சக்கரவர்த்தி.

611
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

அதன் பிறகு வந்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஆர்சிபி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்து 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

711
ஷர்துல் தாக்கூர்

பந்து வீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்டும், சுயாஷ் ஷர்மா 3 விக்கெட்டும், சுனில் நரைன் 2 விக்கெட்டும், ஷர்துல் தாக்கூர் ஒரு விக்கெட்டும் கைபற்றினர். இந்தப் போட்டியில் ஷர்துல் தாக்கூருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 
 

811
சுயாஷ் ஷர்மா ரூ.20 லட்சம் மினி ஏலம்

இம்பேக்ட் பிளேயர் - சுயாஷ் ஷர்மா முதல் ஐபிஎல் போட்டி 2023 (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

முதல் முறையாக ஐபிஎல் தொடரில் அறிமுகமானவர் டெல்லியைச் சேர்ந்த சுயாஷ் ஷர்மா. கடந்த ஆண்டு நடந்த மினி ஏலத்தில் கொல்கத்தா அணியால் ரூ.20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

911
சுயாஷ் ஷர்மா 3 விக்கெட்

வயது 19 மட்டுமே. (19 வயது, 10 மாசம் 22 நாட்கள்). டெல்லி அணிக்காக அண்டர் 25 போட்டியில் மட்டும் விளையாடியிருக்கிறார். லிஸ்ட் ஏ, ஃபர்ஸ்ட் கிளாஸ், உள்ளூர் டி20, சர்வதேச கிரிக்கெட் போட்டி என்று வேறு எந்தப் போட்டியிலும் அவர் விளையாடவில்லை.
 

1011
சுயாஷ் ஷர்மா - இம்பேக்ட் பிளேயர்

இதுதான் அவர் முதல் போட்டி. ஆனால், பிளேயிங் 11ல் அவர் விளையாடவில்லை. மாறாக வெங்கடேஷ் ஐயருக்குப் பதிலாக இம்பேக்ட் பிளேயராக ஒரு சுழற்பந்து வீச்சாளராக களத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

1111
சுயாஷ் ஷர்மா - ஐபிஎல் அறிமுகம்

தனது அறிமுக போட்டியிலேயே தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், கரண் சர்மா ஆகியோரது விக்கெட்டை எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இனி வரும் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் முக்கிய இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories