Published : Apr 07, 2023, 02:31 PM ISTUpdated : Apr 07, 2023, 02:37 PM IST
ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய போட்டியில் மோதும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஆடுகின்றன. முதலிரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியடைந்த நிலையில், மீண்டும் வெற்றியை பெறும் முனைப்பில் லக்னோ அணி களமிறங்குகிறது.
26
முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.
லக்னோவில் நடக்கும் இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். தென்னாப்பிரிக்க வீரர்கள் சர்வதேச கடமையை ஆற்றிவிட்டு ஐபிஎல்லுக்கு திரும்பியுள்ளனர். அதனால் இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படுகிறது.
46
Image Credit: PTI
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் குயிண்டன் டி காக் ஆடுவதால் மார்கஸ் ஸ்டோய்னிஸ் நீக்கப்படலாம். சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் அணியில் இணைவதால் ஃபஸல்ஹக் ஃபரூக்கி நீக்கப்படலாம்.