மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா
ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான 16ஆவது சீசன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரையில் நடந்த 9 போட்டிகளிலும் டாஸ் வென்ற அணி பந்து வீச்சே தேர்வு செய்து விளையாடி ஒரு சில போட்டிகளில் வெற்றியும், ஒரு சில போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா
இதுவரையில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்யவில்லை. பெங்களூருவில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிற்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது.
மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா
இதைத் தொடர்ந்து வரும் 8ஆம் தேதி நாளை மும்பை ஹோம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர் கொள்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ரோகித் சர்மா தனது மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் கூட செல்லவில்லை.
மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா
கடந்த ஆண்டில் ரோகித் சர்மாவின் பேட்டிங் சராசரி 19.1 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 120.1 ஆக மட்டுமே இருந்துள்ளது. 5 முறை சாம்பியன் பெற்றுக் கொடுத்ததால் ரோகித் சர்மா கேப்டனாக இருக்கிறார் என்றும், இல்லையென்றால், அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பார் என்று விமர்சனம் எழுந்தது.
மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா
இதனால் ரோகித் சர்மா தனது பேட்டிங் ஃபார்மை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார். இந்த நிலையில், தான் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களின் பயிற்சியில் சச்சின் டெண்டுல்கர் இணைந்துள்ளார்
மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக உள்ள சச்சின், ரோகித் சர்மாவுக்கு பேட்டிங் பயிற்சி கொடுத்துள்ளார். எப்போதும் போன்று ரோகித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை காட்டினாலே அவரது பேட்டிங் ஃபார்ம் சிறப்பாக இருக்கும்.
மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா
அவர் நிதானமாக ஆடுவதால் தான் சொதப்புகிறார். ரோகித் சர்மா மட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் என்று அதிரடி வீரர்களும் மோசமான ஃபார்மில் இருக்கின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா
இந்த நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு மட்டுமின்றி மற்ற வீரர்களுக்கும் தனது பேட்டிங் அறிவுரையை கொடுத்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் - ரோகித் சர்மா
நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க உள்ள சென்னைக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.