இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் ஆடியபோது முதுகில் காயம் ஏற்பட்டது. அதன்பின்னர் ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை ஆகிய பெரிய ஐசிசி தொடர்களில் பும்ரா ஆடவில்லை. அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.