சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆயிரம் ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இணையும் ரோகித் சர்மா!

Published : Feb 28, 2023, 05:45 PM IST

ரோகித் சர்மா 45 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆயிரம் ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இணைவார்.  

PREV
17
சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆயிரம் ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இணையும் ரோகித் சர்மா!
ரோகித் சர்மா

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

27
இந்தூர் டெஸ்ட்

இதையடுத்து, நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி நாளை இந்தூர் மைதானத்தில் நடக்கிறது.
 

37
ரோகித் சர்மா 17 ஆயிரம் ரன்கள்

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 45 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆயிரம் ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் ஒருவராக இணைவார். தற்போது வரையில் ரோகித் சர்மா 16955 ரன்கள் எடுத்துள்ளார். 

47
ரோகித் சர்மா 45 ரன்கள் தேவை

இந்தூரில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா 45 ரன்கள் எடுத்தால் 17 ஆயிரம் ரன்கள் எடுத்த 7ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, எம் எஸ் தோனி, சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விரேந்திர சேவாக் ஆகியோர் 17 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

57
ரோகித் சர்மா 16955

இதற்கு முன்னதாக டெல்லி டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 25 ஆயிரம் ரன்களை கடந்தார். தற்போது வரையில் விராட் கோலி 25012 ரன்கள் எடுத்துள்ளார்.

67
ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா: பேட் கம்மின்ஸ், ஆஷ்டன் அகர், ஸ்காட் போலந்து, அலெக்ஸ் கேரே, கேமரூன் க்ரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், டிரேவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மேட் குன்மேன், மார்னஸ் லபுசேஞ்ச், நாதன் லையன், லேன்ஸ் மோரிச், டோட் முர்ஃபி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வீப்சன், டேவிட் வார்னர்.
 

77
இந்தியா அணி

இந்தியா: ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சுப்மன் கில், சட்டீச்வர் புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஷ் ஐயர், கேஎஸ் பரத், இஷான் கிஷான், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமெஷ் யாதவ், சூர்யகுமார் யாதவ், ஜெயதேவ் உனத்கட்.
 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories