ஐபிஎல்லின் அதிவேக பந்து வீசிய பவுலர் யார் தெரியுமா..? டாப் 5ல் 2 இடங்களை ஒரே இந்திய பவுலர் பிடித்து சாதனை

First Published | Feb 28, 2023, 2:49 PM IST

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 16வது சீசன் வரும் மார்ச் 31ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கான ஆட்டமாக இருக்கிறது. ஆனாலும் ஐபிஎல்லில் அதையும் மீறி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தி பல பவுலர்கள் மேட்ச் வின்னர்களாக திகழ்ந்திருக்கின்றனர். மலிங்கா, பும்ரா மாதிரியான பவுலர்கள் அந்த ரகத்தினர். ஐபிஎல்லில் அதிவேக பந்துகளை வீசிய டாப் 5 பவுலர்கள் யார் யாரென்று பார்ப்போம். 
 

1. ஷான் டைட் - 157.7 கிமீ வேகம்

ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் ஷான் டைட் ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2010-2013 காலக்கட்டத்தில் ஆடினார். 21 போட்டிகளில் ஆடி 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2011 ஐபிஎல்லில் 157.7 கிமீ வேகத்தில் ஷான் டைட் வீசிய பந்துதான் இன்றளவும் ஐபிஎல்லின் அதிவேக பந்தாக இருக்கிறது. அந்த சாதனையை 11 ஆண்டாக எந்த பவுலரும் முறியடிக்கவில்லை.
 

2. உம்ரான் மாலிக் - 157 கிமீ வேகம்

இந்தியாவிற்கு காஷ்மீரிலிருந்து கிடைத்துள்ள அதிவேக பவுலர் உம்ரான் மாலிக். தனது அதிவேக பவுலிங்கால் சர்வதேச கிரிக்கெட்டின் கவனத்தை ஈர்த்துள்ளார் உம்ரான் மாலிக். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடிவரும் உம்ரான் மாலிக், 2022 ஐபிஎல்லில் டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் ரோவ்மன் பவலுக்கு 157 கிமீ வேகத்தில் வீசிய பந்துதான் ஐபிஎல்லின் 2வது அதிவேக பந்து ஆகும்.

IND vs AUS: தம்பி நீ வேலைக்கு ஆகமாட்ட கிளம்பு! இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்! உத்தேச ஆடும் லெவன்

Tap to resize

3. அன்ரிக் நோர்க்யா - 156.22 கிமீ வேகம்

தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் அன்ரிக் நோர்க்யா ஐபிஎல்லில் டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடிவருகிறார். 2020 ஐபிஎல்லில் நோர்க்யா 156.22 கிமீ வேகத்தில் வீசிய பந்துதான், ஐபிஎல்லின் 3வது அதிவேக பந்து. நோர்க்யா ஐபிஎல்லில் 30 போட்டிகளில் ஆடி 43 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
 

4. உம்ரான் மாலிக் - 156 கிமீ

இந்திய வேகம் உம்ரான் மாலிக் தான் 4வது இடத்திலும் உள்ளார். அவர் 156 கிமீ வேகத்தில் வீசிய பந்து 4வது இடத்தில் உள்ளது.

அஷ்வின், ஜடேஜாவிற்கு சாதகமாக பிட்ச்சை ரெடி பண்ணி நம்மை போட்டு தாக்குறாங்க..! ஆஸி., முன்னாள் வீரர் விமர்சனம்

5. அன்ரிக் நோர்க்யா - 155.1 கிமீ வேகம்

டெல்லி கேபிடள்ஸின் அன்ரிக் நோர்க்யா 155.1 கிமீ வேகத்தில் வீசிய பந்து 5வது இடத்தில் உள்ளது. 3 மற்றும் 5 ஆகிய 2 இடங்களிலும் நோர்க்யா தான் உள்ளார்.
 

Latest Videos

click me!