ஆஸ்திரேலியா 4-0 என்று ஒயிட்வாஷ் ஆகாமல் திரும்பி வந்தாலே சாதனை தான் - கிளென் மெக்ராத்!

First Published Feb 28, 2023, 12:24 PM IST

ஆஸ்திரேலியா 4-0 என்று ஒயிட்வாஷ் ஆகாமல் திரும்பி வந்தாலே அது பெரிய சாதனை என்று முன்னாள் வீரர் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
 

ஆஸ்திரேலியா

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

இந்தியா - ஆஸ்திரேலியா

இதையடுத்து, நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி நாளை இந்தூர் மைதானத்தில் நடக்கிறது.
 

Latest Videos


ஆஸ்திரேலியா

தாயாருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் நாடு திரும்பியுள்ளார். அவருக்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வார்னரும் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
 

கிளென் மெக்ராத்

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் செயல்பாடு குறித்து முன்னாள் வீரர் கிளேன் மெக்ராத் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்த இக்கட்டான சுழுலில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுசேஞ்ச் ஆகிய வீரர்களை மட்டுமே ஆஸ்திரேலியா நம்பியுள்ளது. பேட்டிங் வரிசையில் ஒவ்வொருவரும் ரன்கள் குவிக்க வேண்டும். இந்தியாவில் சுழற்பந்து வீச்சை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இல்லை என்று நான் நினைக்கிறேன்.

ஆஸ்திரேலியா

முழு பேட்டிங் வரிசையும் ரன் குவிக்க வேண்டும்," இந்தியாவில் சுழற்பந்து வீச்சை எப்படி விளையாடுவது என்பது குறித்த கேம் பிளானில் அவர்கள் உறுதியாக இருக்கவில்லை என்று நினைக்கிறேன். 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் மிகவும் பரபரப்பாக இருந்தனர். ஏற்கனவே தோற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஆஸி, வீரர்கள் பாடம் கற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். 
 

கிளென் மெக்ராத்

இந்தியாவில் அதிக ரன்கள் எடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோர் முதல் 2 டெஸ்ட் போட்டியில் அணியில் இடம் பெறாதது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்திய மைதானங்களில் எப்படி ஆட வேண்டும் என்று இந்திய வீரர்களுக்கு நன்கு தெரியும்.
 

ஆஸ்திரேலியா

அதனைப் பார்த்து ஆஸ்திரேலிய வீரர்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டு ஆட வேண்டும். இந்த தொடரில் 4-0 என்ற கணக்கில் தோல்வியடையாமல் இருந்தாலே அது ஆஸ்திரேலியா செய்யும் சாதனையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
 

click me!