30 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றில் மறக்க முடியாத சாதனை - டெஸ்டில் 1 ரன் வெற்றி பெற்ற நியூசிலாந்து!

Published : Feb 28, 2023, 09:56 AM IST

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு ரன்னில் த்ரில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.  

PREV
18
30 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றில் மறக்க முடியாத சாதனை - டெஸ்டில் 1 ரன் வெற்றி பெற்ற நியூசிலாந்து!
நியூசிலாந்து 1 ரன் வெற்றி

இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 267 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது.
 

28
1 ரன்னில் வெற்றி பெற்ற 2ஆவது அணி

இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 435 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 153 ரன்கள் (நாட் அவுட்), ஹேரி ப்ரூக் 186 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட் கைப்பற்றினார்.
 

38
நியூசிலாந்து 1 ரன் வெற்றி

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத் தொடர்ந்து பாலோ ஆன் தவிர்க்க மீண்டும் தனது 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 483 ரன்கள் மட்டுமே எடுத்தது. 
 

48
நியூசிலாந்து த்ரில் வெற்றி

இதில் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 132 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் சதம் அடித்ததின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 7787 ரன்களை குவித்து, டெஸ்ட்டில் அதிக ரன்களை குவித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்து தரப்பில் சுழற்பநது வீச்சாளர் ஜாக் லீச் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
 

58
நியூசிலாந்து வரலாற்று சாதனை

இதையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி தான். தொடக்க வீரர்கள் ஜாக் கிராலே (24), பென் டக்கெட் (33) என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ராபின்சன் 2 ரன்களில் வெளியேறினார். 
 

68
1 ரன்னில் வெற்றி பெற்ற 2ஆவது அணி

போப் 14 ரன்களில் வெளியேற ஜோ ரூட் மட்டும் அதிகபட்சமாக 95 ரன்கள் எடுத்தார். இறுதியாக இங்கிலாந்து அணி எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 256 ரன்கள் மட்டுமே 1 ரன்னில் தோல்வியை தழுவியது. நியூசிலாந்து அணி சார்பில் நீல் வாக்னர் 4 விக்கெட்டும், டிம் சௌதி 3 விக்கெட்டும், மேட் ஹென்றி 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
 

78
நியூசிலாந்து வரலாற்று சாதனை

இந்த ஒரு ரன் வெற்றியின் மூலம் நியூசிலாந்து வரலாற்று சாதனையில் இடம் பிடித்தது. ஆம், ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டியில் ஒரு ரன்னில் வெற்றி பெறுவதை பார்த்திருக்கலாம். ஆனால், டெஸ்ட் போட்டியில் ஒரு ரன்னில் வெற்றி பெறுவது சாதமகமற்றது. அப்படியொரு சாதனையைத் தான் நியூசிலாந்து அணி படைத்துள்ளது.
 

88
1 ரன்னில் வெற்றி பெற்ற 2ஆவது அணி

இதற்கு முன்னதாக கடந்த 1993 ஆம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 ரன்னில் வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தகக்து. 
 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories