இதுகுறித்து பேசிய முகமது கைஃப், ரோஹித் சர்மா நல்ல ஃபார்மில் உள்ளார். நிறைய ரன்களை அடித்துவருகிறார். ஸ்பின்னிற்கு சாதகமான ஆடுகளங்களில் எப்படி பேட்டிங் ஆடவேண்டும் என்பதை ஆடியே காட்டுகிறார். லாங் ஆனில் ஃபீல்டரே நின்றாலும் கூட, அவரது தலைக்கு மேல் தூக்கி சிக்ஸர் அடிக்கிறார் ரோஹித். லாங் ஆனில் ஃபீல்டர் நின்றாலும் தனது திறமை மீது நம்பிக்கை வைத்து சிக்ஸர் அடிக்கிறார். வளர்ந்துவரும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும், ரோஹித் சர்மா பந்தை எந்த திசையில் எப்படி அடிக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். ரோஹித் சர்மா ஆடும் விதத்தை பார்க்கையில், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் அபாரமாக ஆடுவார் என்று நம்புவதாக முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.