ரவீந்திர ஜடேஜா 499
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2ஆவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
ரவீந்திர ஜடேஜா 499
இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1 ஆம் தேதி இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியின் மூலமாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா சாதனை படைக்க இருக்கிறார்.
ரவீந்திர ஜடேஜா 499
இந்தப் போட்டியில் அவர் ஒரு விக்கெட் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட் கைப்பற்றிய 2ஆவது வீரர் என்ற சாதனையை படைப்பார். அதுமட்டுமின்றி தற்போது வரையில் ஜடேஜா 5,523 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டும், 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.
ரவீந்திர ஜடேஜா 499
இதே போன்று 2ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டும், 2ஆவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டும் கைப்பற்றினார். அதுமட்டுமின்றில் 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கவாஜா, கம்மின்ஸ், டாட் மர்ஃபி ஆகிய மூவரையும் ஜடேஜா வீழ்த்தினார். இதில் கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 விக்கெட் என்ற மைல்கல்லை ஜடேஜா எட்டினார்.
ரவீந்திர ஜடேஜா 499
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 விக்கெட் மற்றும் 2500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய லெஜண்ட் ஆல்ரவுண்டர்களின் பட்டியலில் இணைந்தார் ஜடேஜா. மேலும் இந்த மைல்கல்லை 62 டெஸ்ட் போட்டிகளில் எட்டியுள்ள ஜடேஜா, இந்த மைல்கல்லை விரைவாக எட்டிய 2வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
ரவீந்திர ஜடேஜா 499
இதுவரையில் 62 டெஸ்ட் போட்டிகளில் 118 இன்னிங்ஸில் விளையாடிய ரவீந்திர ஜடேஜா 259 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 171 ஒரு நாள் போட்டிகளில் 166 இன்னிங்ஸில் விளையாடி 189 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.
ரவீந்திர ஜடேஜா 499
64 டி20 போட்டிகளில் 62 இன்னிங்ஸில் பங்கேற்ற ஜடேஜா 51 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 499 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். வரும் மார்ச் 1 ஆம் தேதி நடக்கும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் கைப்பற்றினால் சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.