3வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1ம் தேதி இந்தூரில் தொடங்கும் நிலையில், அந்த டெஸ்ட்டில் இந்திய அணியின் தொடக்க வீரர் குறித்து பேசிய சௌரவ் கங்குலி, ஷுப்மன் கில்லுக்கான நேரம் வரும். அப்போது, அவருக்கான வாய்ப்புகளை பெறுவார். தேர்வாளர்கள், கேப்டன், பயிற்சியாளர் ஆகிய அனைவரும் ஷுப்மன் கில்லை உயர்வாக மதிப்பிடுகிறார்கள். அதனால் தான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவரை தொடர்ந்து ஆடவைக்கிறார்கள். அவரும் சிறப்பாக ஆடுகிறார். டெஸ்ட் அணியில் உங்களுக்கான (கில்) இடத்திற்காக நீங்கள் காத்திருக்க வேண்டும் என்ற செய்தியை அவரிடம் அணி நிர்வாகம் தெளிவுபடுத்தியிருப்பதாக நான் நினைக்கிறேன் என்றார் கங்குலி.