இதெல்லாம் ஒரு சாதனையா? இத பத்தி யார் பேசுவா? விராட் கோலிக்கு பதிலளித்த மாட்டி பனேசர்!

First Published | Feb 28, 2023, 11:49 AM IST

ஒரு சில தொடர்களில் மட்டும் வெற்றி பெற்று முதலிடம் பிடிப்பவர்களை வரலாறு நினைவில் வைத்திருக்காது என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மாட்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
 

மாட்டி பனேசர்

சச்சின், எம் எஸ் தோனி வரிசையில் சிறந்து வீரராக இருப்பவர் விராட் கோலி. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இவர், 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். 

விராட் கோலி

அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டார். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்கச் செய்தார். 
 


மாட்டி பனேசர்

விராட் கோலி 68 போட்டிகளில் 40 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் வரலாறு காணாத வெற்றிகளை பெற்றார். ஆனால், 2017 சாம்பியன்ஸ் டிராபி, 2019 உலகக் கோப்பை, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலகக் கோப்பை என்று ஐசிசி தொடர்களில் ஒன்று கூட அவரால் வெற்றி பெற முடியவில்லை.

விராட் கோலி

அதுமட்டுமின்றி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டாக இருந்த விராட் கோலி தலைமையிலான அணி ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் பெறவில்லை. ஆனால், ஐசிசி தொடர்களில் ஒன்றில் கூட வெற்றி பெறாவிட்டாலும், எதிரணிகளை அதனுடைய சொந்த மண்ணில் வெற்றி பெறுவதே பெரிய சாதனை என்று விராட் கோலி கூறியிருந்தார். 
 

மாட்டி பனேசர்

மேலும், 2016 - 2021 வரை தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அணியாக இந்தியா இருந்ததற்கான டெஸ்ட் கோப்பைகளை வென்றதை யாரும் பார்ப்பதில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

விராட் கோலி

உலகக் கோப்பையை விட இந்திய அணியை வெற்றிப்பாதையில் கொண்டு செல்லும் கலாச்சாரத்தை உருவாக்கியதே தனது சாதனை என்று அவர் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்தின் முன்னாள் வீரர் மாட்டி பனேசர் கூறியிருப்பதாவது: 

மாட்டி பனேசர்

சாதாரணமாக இரு தரப்பு தொடர்களை வென்று ஐசிசி தரவரிசையில் டாப் இடங்களை பிடிக்கும் கேப்டனகளை யாரும் வரலாற்றில் நினைவில் வைத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால், ஐசிசி உலகக் கோப்பைகளை வெல்லும் கேப்டன்களை மட்டுமே காலத்திற்கும் அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள்.

விராட் கோலி

தரவரிசைப் பட்டியலில் 2 அல்லது 3 ஆவது இடத்தில் இருக்கும் அணிகளைப் பற்றி யாரும் பேசுவதும் இல்லை, நினைவில் வைத்திருப்பதும் இல்லை. மாறாக ஐசிசி தொடர்களில் வெற்றி பெறுபவர்களை மட்டுமே எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos

click me!