LSG Vs RCB: லக்னோவை பந்தாடி முதல் 2 இடங்களுக்குள் செல்லுமா ஆர்சிபி?

Published : May 27, 2025, 10:11 AM IST

ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் இன்று மோதுகின்றன. இதில் வெற்றி பெற்றால் ஆர்சிபி முதல் 2 இடங்களுக்குள் சென்று விடும்.

PREV
16
Match 70 – LSG vs RCB: IPL 2025 Prediction, Pitch Report & Key Players

ஐபிஎல் 2025 சீசன் நிறைவுக் கட்டத்தை நெருங்கி விட்டது. மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டன. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஏறக்குறைய முதல் இடத்தை உறுதி செய்து விட்டது. 2வது இடத்துக்கான ரேஸில் குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி அணிகள் உள்ளன. இந்நிலையில், ஆர்சிபிக்கு 2வது இடத்தை உறுதி செய்வதற்கான முக்கியமான ஆட்டம் இன்று நடக்கிறது.

26
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்-ஆர்சிபி மோதல்

இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் ஆர்சிபி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. ஏற்கெனவே பிளே ஆப் சுற்றை உறுதி செய்து விட்ட ஆர்சிபி அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 2வது இடத்தை பிடித்து விடலாம். அதிலும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பஞ்சாப் கிங்ஸ் அணியை ரன் ரேட்டில் முந்தி விட்டு முதலிடம் கூட பிடிக்க வாய்ப்புள்ளது.

36
ஆர்சிபி அணியில் ஜோஸ் ஹேசில்வுட்

ஆர்சிபி அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக படுதோல்வி அடைந்தது. பேட்டிங்கில் பில் சால்ட், விராட் கோலி, டிம் டேவிட் சிறப்பாக செயல்பட்டாலும் கேப்டன் ரஜத் படிதார் மோசமாக செயல்படுகிறார். 

பவுலிங்கில் புவனேஷ்வர் குமார் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. கடந்த 2 போட்டியில் ஜோஸ் ஹேசில்வுட் இல்லாததால் அந்த அணி 200 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது. இன்றைய ஆட்டத்தில் ஹேசில்வுட் விளையாட உள்ளது ஆர்சிபி அணிக்கு பலம் சேர்த்துள்ளது.

46
லக்னோ பிட்ச் எப்படி?

லக்னோ அணியை பொறுத்தவரை இனி இழப்பதற்கு ஏதும் இல்லை என்பதால் துணிந்து விளையாடும். கடந்த போட்டியில் குஜ்ராத்துக்கு அதிர்ச்சி அளித்த அந்த அணி ஆர்சிபிக்கும் அதிர்ச்சி அளிக்க காத்திருக்கிறது. முதல் 3 வீரர்கள் மிட்ச்செல் மார்ஷ், எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். 

போட்டி நடைபெறும் லக்னோ எகானா ஸ்டேடியத்தில் உள்ள பிட்ச் மெதுவாகவும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாகவும் இருந்து வருகிறது. 

இருப்பினும் கடந்த இரண்டு ஆட்டங்களில் அந்த போக்கு மாறி, நான்கு இன்னிங்ஸ்களில் மூன்று ஆட்டங்களில் 200 க்கும் மேற்பட்ட ஸ்கோர்கள் அடிக்கப்பட்டுள்ளன. இன்றைய போட்டியின் பிட்ச்சும் அந்த மாதிரி தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

56
எந்த அணி அதிக வெற்றி பெற்றுள்ளது?

LSG மற்றும் RCB அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது வானிலை தெளிவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. Accuweather.com இன் படி, லக்னோவில் மழை பெய்ய ஏழு சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது. இதனால் போட்டியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. 

இரண்டாவது இன்னிங்ஸில் சிறிது நேரம் பனியின் தாக்கம் இருக்கலாம். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆர்சிபி 3 போட்டிகளிலும், லக்னோ 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

66
இரு அணிகளின் பிளேயிங் லெவன்

ஆர்சிபி: ரஜத் படிதார் (கேப்டன்), பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ஜிதேஷ் ஷர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் யஷ் தயாள்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ரிஷப் பண்ட் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், எய்டன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், அப்துல் சமத், ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், ரவி பிஷ்னோய், திக்வேஷ் சிங் ரதி, அவேஷ் கான் மற்றும் ஆகாஷ் தீப்.

Read more Photos on
click me!

Recommended Stories