சச்சின், பவுமா சாதனையை முறியடித்த சூர்யகுமார்! இனி யாரும் நெருங்க முடியாத ரிக்கார்ட்!

Published : May 27, 2025, 08:32 AM IST

பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் சச்சின் மற்றும் டெம்பா பவுமாவின் சாதனைகளை முறியடித்தார்.

PREV
15
Suryakumar Yadav Broke Sachin, Temba Bavuma Record

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 184 ரன்கள் குவித்தது. 

சூர்யகுமார் யாதவ் 39 பந்துகளில் 57 ரன்கள் அடித்தார். பின்பு விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

25
மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்

தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா 35 பந்தில் 62 ரன் எடுத்தார். ஜோஸ் இங்கிலீஸ் 42 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 73 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்திருந்தாலும் அரை சதம் அடித்த சூர்யகுமார் 'கிரிக்கெட்டின் கடவுள்' சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார்.

35
சச்சின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்

அதாவது சூர்யகுமார் யாதவ் ஒரு ஐபிஎல் சீசனில் அத்க ரன்கள் எடுத்த மும்பை இந்தியன்ஸ் வீரர் என்ற சாதனையை படைத்து சச்சினின் சாதனையை தகர்தெறிந்துள்ளார். சூர்யகுமார் இந்த ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் 71.11 என்ற சராசரியுடன், 167.97 ஸ்டிரைக் ரேட்டில் 640 ரன்கள் குவித்துள்ளார். 

2010 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 618 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அந்த 15 ஆண்டு கால சாதனையை சூர்யகுமார் முறியடித்துள்ளார்.

45
பவுமா சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்

மேலும் சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக 14வது முறையாக 25க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா 13 டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக 25க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த நிலையில், சூர்யகுமார் இந்த சாதனையையும் முறியடித்துள்ளார்.

55
பொன்னான வாய்ப்பை இழந்த மும்பை இந்தியன்ஸ்

இந்த சீசன் முழுவதும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி வருகிறார். நேற்றுடன் 5வது அரைசதத்தை விளாசியுள்ளார். தனக்கு பிடித்த ஸ்வீப் ஷாட்கள் மற்றும் ஸ்கொயர் லெக்கில் ஃபிளிக் ஷாட்கள் மூலம் எதிரணியை களங்கடித்து வருகிறார். 

நேற்றைய தோல்வியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 2 இடங்களை பிடிக்கும் பொன்னான வாய்ப்பை இழந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories