India Women vs England Women 3rd T20 Match
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து மகளிர் அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில், ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்றது.
Watch INDW vs ENGW T20I Live
இதையடுத்து தொடரை தீர்மானிக்கும் 2ஆவது டி20 போட்டி நேற்று நடந்தது. இதில், இந்திய மகளிர் அணி 80 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
India Women T20I Series
இதில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தீப்தி சர்மா 11 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 12 ரன்களில் வெளியேறினார். அப்போது இந்திய அணி 153 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து நிதானமாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 48 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸ் உள்பட 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
India Women
ஆனால், அவர் இந்தப் போட்டியின் மூலமாக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக 100 பவுண்டரி அடித்துள்ளார். டி20 போட்டியில் ஒரு அணிக்கு எதிராக அதிக பவுண்டரி அடித்த வீராங்கனைகளின் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா 3ஆவது இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக, மெக் லானிங் 124 பவுண்டரிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
India Women vs England Women 3rd T20I
பெத் மூனி 111 பவுண்டரிகளுடன் 2ஆவது இடத்தில் நீடிக்கிறார். நான்காவது இடத்தில் சுசி பேட்ஸ் 100 பவுண்டரிகளுடன் இருக்கிறார். ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து வந்த ரிச்சா கோஷ் 2 ரன்களில் நடையை கட்ட கடைசியாக ஹர்மன்ப்ரீத் கவுர் 6 ரன்கள் மற்றும் அமன் ஜோத் கவுர் 10 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.
INDW vs ENGW T20I
இறுதியாக இந்திய மகளிர் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய மகளிர் அணி 1-2 என்று இழந்துள்ளது. இந்த டி20 தொடரைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி வரும் 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையில் நடக்கிறது.