இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்னதாகவே தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், போட்டியானது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி இன்று டர்பனில் நடக்கிறது.
27
South Africa vs India First T20I
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் நிலையில் 7 மணிக்கு டாஸ் போட இருந்தது. ஆனால், டர்பனில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் போட்டியானது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளது. இதே போன்று ஒரு நிலை தான் கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் போதும் நடந்துள்ளது.
37
South Africa vs India T20I
இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான 7ஆவது லீக் போட்டியில் டாஸ் போட்ட நிலையில் மழையின் போது போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. டர்பன் என்றாலே மழை என்று சொல்லும் அளவிற்கு சில போட்டிகள் மழையின் காரணமாகவே ரத்து செய்யப்பட்டுள்ளன.
47
SA vs IND 1st T20I
டர்பனில் 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஆவலுடன் விளையாட இருந்தது. ஆனால், போட்டியானது ரத்து செய்யப்பட்டது கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி வரும் 12 ஆம் தேதி கியூபெர்காவில் நடக்கிறது.
57
SA vs IND Rain
கடந்த 2007ல் மட்டும் இந்தியா டர்பனில் 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டை செய்யப்பட்டுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. இதுவரையில் இரு அணிகளும் 24 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், இந்தியா 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
67
Durban Rain
தென் ஆப்பிரிக்கா 10 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. தென் ஆப்பிரிக்காவில் நடந்த 7 டி20 போட்டிகளில் இந்தியா 5ல் வெற்றியும், தென் ஆப்பிரிக்கா 2 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
77
South Africa Rain
டர்பனில் மொத்தமாக 18 போட்டிகள் நடந்துள்ளது. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 9 போட்டியிலும், 2ஆவது பேட்டிங் செய்த அணி 8 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆவரேஜ் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் என்னவோ 143 ரன்கள் ஆகும். இந்த 18 போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் மொத்தமாக 162 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளர்கள் 42 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கின்றனர்.