டர்பனில் மழை; டாஸ் போடுவதில் சிக்கல் – SA vs IND முதல் டி20 போட்டி மழையால் ரத்தாக வாய்ப்பு!

First Published Dec 10, 2023, 7:56 PM IST

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்னதாகவே மழை பெய்து வரும் நிலையில் இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

SA vs IND T20I Series

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு கொடுத்த இங்கிலாந்து – கடைசி டி20 போட்டியில் வெற்றி பெறுமா இந்திய மகளிர் அணி?

South Africa vs India T20

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி இன்று டர்பனில் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் நிலையில் 7 மணிக்கு டாஸ் போட இருந்தது. ஆனால், டர்பனில் மழை பெய்து வரும் நிலையில் மைதானம் தார்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது.

Latest Videos


Durban Rain

இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்படும். கடந்த 2007ல் மட்டும் இந்தியா டர்பனில் 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டை செய்யப்பட்டுள்ளது.

South Africa vs India

ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. இதுவரையில் இரு அணிகளும் 24 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், இந்தியா 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2007 டி20 உலகக் கோப்பைக்கு பிறகு முதல் முறையாக டர்பனில் டி20 போட்டியில் விளையாடும் இந்தியா!

India Tour Of South Africa

தென் ஆப்பிரிக்கா 10 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. தென் ஆப்பிரிக்காவில் நடந்த 7 டி20 போட்டிகளில் இந்தியா 5ல் வெற்றியும், தென் ஆப்பிரிக்கா 2 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. India vs Canada, Hockey: ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா!

South Africa vs India

டர்பனில் மொத்தமாக 18 போட்டிகள் நடந்துள்ளது. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 9 போட்டியிலும், 2ஆவது பேட்டிங் செய்த அணி 8 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆவரேஜ் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் என்னவோ 143 ரன்கள் ஆகும். இந்த 18 போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் மொத்தமாக 162 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளர்கள் 42 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கின்றனர்.

Shubman Gill

26 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா டர்பனில் நடக்கும் முதல் டி20 போட்டியில் இன்று விளையாடுகிறது. இதற்கு முன்னதாக 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின் போது டர்பனில் விளையாடியது. Virat Kohli Question: அகில இந்திய சட்ட நுழைவுத் தேர்வில் இடம் பெற்றிருந்த விராட் கோலி தொடர்பான கேள்வி!

click me!