திருமணம் எப்போது என கேட்டு வந்தவர்களுக்கு... ஒரு வழியாக தன்னுடைய 45 வயதில் கல்யாண செய்தியை கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டார் பிரேம்ஜி. நடிகராகவும், இசையமைப்பாளராகவும் அறியப்படும் பிரேம்ஜி, ஒரு சில காதல் சர்ச்சைகளில் சிக்கியவர். அதே போல் எப்போதும் பார்ட்டி, பப், என ஜாலியாக இருக்கும் மனிதர். மனதில் பட்டத்தை எந்த ஒரு ஒளிவு மறைவும் இன்றி பேசுவது இவருடைய ஸ்பெஷாலிட்டி என்றே கூறலாம்.
premgi
தன்னுடைய பிள்ளைகள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களை கூட, அவர்களின் தோலை தட்டிக் கொடுத்து அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருந்து வந்துள்ளார். பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ளாதது, கங்கை அமரனுக்கு மிகப்பெரிய உறுத்தலாகவே இருந்து வந்த நிலையில்.... சமீபத்தில் சேலத்தைச் சேர்ந்த வங்கி ஊழியர் இந்துவை காதலித்து கரம் பிடித்தார் பிரேம்ஜி. இந்த திருமணத்தால் ஒட்டுமொத்த குடும்பமே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
திருமணம் வரை செல்ல இருந்த இந்த காதல்.. திருமணத்தில் முடியாமல் பிரேக்கப்பில் முடிய காரணம் நடிகர் சிவா தானம். அவர் எதுக்கு திருமணம் எல்லாம் செஞ்சிகிட்டு என ஏதேதோ சொல்லி கொளுத்தி போட இருவருமே திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டார்களாம். பல வருடங்களாக இதே மனநிலையோடு இருவருமே உள்ள நிலையில்... இந்துவின் காதலால் மனம் மாறி பிரேம்ஜி திருமணம் செய்து கொண்டுள்ளார். சோனா இப்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.