'வாக்கிங்' போகிறீங்களா? அப்போ இது உங்களுக்கு தான்; தவிர்க்க வேண்டிய 8 விஷயங்கள்!

By manimegalai a  |  First Published Nov 23, 2024, 1:44 PM IST

வாக்கிங் செல்வது என்பது, பலர் தங்களின் வாழ்க்கையில் கடைபிடிக்கும் ஆரோக்கியமான பழக்கங்களில் ஒன்று.  இப்படி வாக்கிங் செல்லும் போது செய்யக்கூடாத 8 பழக்க வழக்கங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
 


30 வயதை கடந்து விட்டாலே, ஒருவர் தங்களின் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள குறைந்த பட்சம் 15 நிமிடமாவது நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவும். சராசரியாக ஒருவர் ஒருநாளைக்கு 2000 நடைகள் நடக்க வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவர்கள் என்றால் கூடுதலாக நடக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

நடைப்பயிற்சி ஆரோக்கியமானது தான்... ஆனால் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் செய்ய கூடாத, முற்றிலும் தவிர்க்க வேண்டிய சில விஷயங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

Tap to resize

Latest Videos

undefined

 நம் உடல் ஆரோக்கியத்துக்கு, எப்படி ஆரோக்கியமான உணவுகள் முக்கியமானதோ அதே போல் ஆரோக்கியமான உடல் பயிற்சிகள் மற்றும் நடை பயிற்சி மிகவும் அவசியம். காலை அல்லது மாலை நேரத்தில் ஒருவர் மேற்கொள்ளும் நடை பயிற்சி அவர்களை, மனதளவிலும் ஆரோக்கியமாக மாற்றுகிறது. காலையில் வாக்கிங் செல்லும் போது... நீங்கள் தனியாக செல்லாமல் அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து ஒரு குரூப்பாக செல்லலாம். அதே போல் உங்களுக்கு என, வாட்ஸ் ஆப்பிள் குரூப் ஒன்றை துவங்கினால் ஒருவர் சோம்பல் பட்டாலும், மற்றொரு நண்பர் உங்களை தட்டி எழுப்பி அழைத்து செல்வார். இது வலுக்கட்டாயமாக உங்களை அழைத்து செல்வது போல் இருந்தாலும் உங்களின் ஆரோக்கியத்துக்கு உகர்ந்தது.

கர்ப்பகாலத்தில் 'கால்கள்' வீங்குதா? 'இப்படி' ஃபாலோ பண்ணா உடனே குறையும்!!

தனியாக வாக்கிங் செல்ல வேண்டிய சூழலில் நீங்கள் இருந்தால்.. உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டு கொண்டே நடை பயணத்தை தொடங்குங்கள். நீங்கள் பாடல் கேட்டு கொண்டு வெளியில் வாக்கிங் செல்லும் போது கூடுதல் கவனத்தோடு இருக்கவும். ஏனென்றால் அதிக சத்தத்துடன் ஒருவேளை நீங்கள் பாடல்கள் கேட்டால் உங்களை நகர்ந்து செல்லும் படி யாராவது ஹாரன் செய்தால் அது உங்கள் செவிகளுக்கு எட்டாமல் போகும். அதீத சத்தத்துடன் பாடல் கேட்பது, உங்கள் மனதை சீக்கிரம் சோர்வாக ஆக்க கூடும். எனவே மிதமான ஒலியில் பாடல்கள் கேட்பதே சிறந்தது.

சிலருக்கு சூழல் காரணமாக  சூரிய ஒளியில் நடைப்பயிற்சி செய்ய முடியாமல்... வீட்டிலேயே திரெட் மில்லில் நடைபயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் முடிந்த வரை சூரிய ஒளியில் நடப்பதே சிறந்தது. ஆனால் வேறு ஆப்ஷன் இல்லை என்றால், திரெட் மில்லில் நடந்து விட்ட பின்னர், சிறிது நேரம் வெய்யில் உங்கள் மீது படும் படி நிற்கவும் இது உங்களுக்கு விட்டமின் E குறைபாடுகளை சரி செய்யும். உங்களின் தேகத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

வாக்கிங் செல்லும் பலர் செய்யும் ஒரு தவறு ஷூ அணியாமல், சாதாரண செருப்புகள் அணிந்து செல்கிறார்கள். இப்படி செல்லும் போது உங்களின் கால்கள் சீக்கிரம் சோர்வடைவதை உணர்வீர்கள். எனவே வாக்கிங் ஷூ உங்களுக்கு வீண் செலவு என எண்ணாமல், நல்ல பிராண்டட் ஷூ அணிந்து செல்லுங்கள். நீங்கள் வாங்கும் ஷூ மிகவும் இறுக்கமாக இருப்பதை தவிர்க்கவும். இல்லை என்றால் உங்களின் கால் கட்டை விரல் நகம் பாதிப்படைய வாய்ப்புகள் உண்டு.

குழந்தைகள் தூங்க தனி அறை அவசியமா? எந்த வயதில் அப்படி செய்யலாம்?

வாக்கிங் செல்லும் நீங்க சாப்பாட்டு விரும்பிகளா? காலையில் வெகு தூரம் நடை பயிற்சி மேற்கொள்ளும் நேரத்தில் சிறிதளவு தண்ணீர் எடுத்து கொள்ளலாமே தவிர, டீ கடையை பார்த்தல் புகுந்து விட கூடாது. பின்னர் அங்கு சுட சுட போடப்படும் , பஜ்ஜி, போண்டா என சாப்பிட்டு நீங்கள் நடைப்பயிற்சி செய்ததே வீண் ஆகிவிடும். நீங்கள் நடை பயிற்சி செல்வதே உங்கள் ஆரோக்கியத்தை மேன்படுத்த தான், எனவே அந்த ஆரோக்கியம் கெட்டும் போகும் விதத்தில் எந்த உணவையும் வெளியிடங்களில் கூட சாப்பிட வேண்டாம். 

 சிலர் வாக்கிங் செல்லும் போது புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த பழக்கம் வாக்கிங் செய்யும் போது கட்டாயம் தவிர்க்க வேண்டிய ஒன்று. நீங்கள் நடை பயிற்சியின் போது வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் நடப்பதால், உங்களின் உடல் உறுப்புக்கள் மிகவும் வேகமாக இயக்கும். இந்த நேரத்தில் உங்கள் நுரையீரல் சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும். அந்த சமயத்தில் குப்பு குப்புனு புகையை விட்டால் அது நுரையீரலுக்கு தீங்கை ஏற்படுத்தும்.

வாக்கிங் செல்லும் போது... கண்ணில் படும் சில காய்கறிகள் மற்றும் கீரைகள் வாங்குவது பல பெண்கள் அன்றாடம் செய்வது தான், இதுபோல் அவ்வப்போது செய்யலாம் ஆனால் அதையே நீங்கள் பழக்கமாக மாற்றி கொள்ள வேண்டாம். நீங்கள் செல்வது நடை பயிற்சிக்கு மட்டுமே தவிர ஷாப்பிங் இல்லை. கையில் கணம் கூடினால், உங்கள் நடையின் வேகமும்... கைகளின் அசைவுகள் குறையும். அதே போல் செல்போன் நோண்டியபடி நனைப்பயிற்சி செல்வத்தையும் தவிர்ப்பது சிறந்தது.

click me!