குழந்தைகள் தூங்க தனி அறை அவசியமா? எந்த வயதில் அப்படி செய்யலாம்?

Parenting Tips : குழந்தைகளை தனி அறையில் தூங்க வைக்க எந்த வயது சிறந்தது? அது ஏன் அவசியம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

what is the right age for a child to sleep alone in tamil mks
Author
First Published Nov 23, 2024, 11:54 AM IST

பொதுவாகவே குழந்தைகள் பிறந்தது முதல் தாயின் அரவணைப்பில் தான் தூங்குவது வழக்கம். அம்மாவின் வாசனை, தொடுதல் மூலமாக அம்மாவை அறிந்து அவளது அமைப்பில் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்து தூங்குகிறார்கள். சில தாய்மார்கள் தங்கள் குழந்தையை கைக்கெட்டும் தூரத்தில் தொட்டில் அல்லது தனி படுக்கையில் தூங்க வைக்கிறார்கள். அதுவே சற்று வளர்ந்த மற்றும் விபரம் தெரிந்த குழந்தைகளை தனி அறையில் கண்டிப்பாக தூங்க வைக்க வேண்டும். 

ஆனால், எந்த வயதில் இருந்து குழந்தைகளை தனி அறையில் தூங்க வைக்க வேண்டும் என்ற சந்தேகம் பல பெற்றோர்களுக்கு உண்டு. இன்னும் சில பெற்றோரோ குழந்தைகளை தனி அறையில் தூங்கு வைப்பதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் கூட இருப்பார்கள். எனவே குழந்தைகளை தனி அறையில் எந்த வயதில் இருந்து தூங்க வைக்க வேண்டும்? அதற்கான காரணம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  குளிர்காலத்தில் அடிக்கடி காய்ச்சல்? குழந்தைங்க நோய் எதிர்ப்பு சக்தி  அதிகரிக்க 'இதை' கொடுங்க!

குழந்தைகளை தனி அறையில் தூங்க வைப்பது ஏன் அவசியம்?

நிபுணர்களின் கூற்றுப்படி, குழந்தைகள் ஆரம்பத்தில் இருந்து பெற்றோருடன் தூங்குவதை பழகி இருப்பதால் தனியறையில் தூங்குவதில் மிகவும் சிரமமாக உணர்வார்கள் மற்றும் அவர்களுக்குள் பயமும் இருக்கும். ஆனால், குழந்தைகளை தனி அறையில் தூங்க வைக்கும் போது அவர்கள் உணர்ச்சி ரீதியாக வலுப்படுவார்கள் மற்றும் அவர்கள் மனதில் இருக்கும் பயமும் நீங்கும். இதனால் அவர்கள் பெற்றோரை சார்ந்து இல்லாமல் தனியாக வாழ கற்றுக் கொள்வார்கள்.

எந்த வயதில் இருந்து குழந்தைகளை தனி அறையில் தூங்க வைக்க வேண்டும்?

நிபுணர்களின் கூற்றுப்படி, 7 வயது வரை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தங்களோடு தூங்க வைக்கலாம் என்று சொல்லுகின்றனர். ஏனெனில் இந்த வயது வரை அவர்கள் தங்கள் மனதளவில் குழந்தைகளாகவே இருப்பார்கள். பிறகு அவர்கள் நன்கு வளர்ந்த உடன் எதையும் சமாளிக்கும் திறன் அவர்களுக்குள் வளர ஆரம்பிக்கும். 

அதுவே குழந்தைக்கு எட்டு வயது தொடங்கியவுடன் அவர்களை தனி அறையில் தூங்க வைப்பது மிகவும் அவசியம். ஒருவேளை இந்த வயதுக்கும் பிறகும் உங்கள் குழந்தை உங்களுடன் ஒரே அறையில் தூங்க வேண்டும் என்று அடம் பிடித்தால் அவர்களுக்கு மெதுவாக எடுத்து சொல்லி அவர்களை தனி அறையில் தூங்க வைக்க பழக்கப்படுத்துங்கள். இப்படி தனியாக தூங்க வைப்பதன் மூலம் குழந்தைகளுக்கு மனவளர்ச்சியையும் மற்றும் மனமுதிர்ச்சியையும் வழங்கும்.

இதையும் படிங்க:  குழந்தையின் முடி நல்லா வளரனுமா? இந்த '1' எண்ணெய் போதும்; கருகருனு வளரும்!

குழந்தைகளை தனி அறையில் தூங்க வைக்கும் முன் இவற்றை நினைவில் கொள்:

  • உங்கள் குழந்தையை நீங்கள் தனி அருகில் தூங்க வைக்க விரும்பினால் அதை படிப்படியாக அவர்களுக்கு பழக்கப்படுத்துங்கள். அதாவது நீங்கள் முதலில் உங்களது படுக்கைக்கு அருகில் அவர்களது படுக்கைப் போட்டு தூங்க பழக்கப்படுத்துங்கள். பிறகு தனியறையில் தூங்க வைக்கவும். 
  • ஒருவேளை உங்கள் குழந்தை தனியாக தூங்க பயப்படுகிறார்கள் என்றால் அவர்களை ஒருபோதும் வற்புறுத்த வேண்டாம். அதற்கு மாறாக வாரத்திற்கு இரண்டு நாட்கள் தனியாக தூங்க பழக்கப்படுத்தவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் குழந்தைகள் தானாகவே தனியாக தூங்க ஆரம்பித்து விடுவார்கள்.
  • அதுபோல உங்கள் குழந்தை தனியாக தூங்க பயப்படுகிறார்கள் என்றால் நீங்கள் அவர்கள் தூங்கும் வரை அவர்களுக்கு அருகில் இருங்கள். இப்படி செய்வதன் மூலம், குழந்தைகள் சிரமம் இன்றி தனியாக தூங்குவதற்கு பழகிக் கொள்வார்கள்.
  • குழந்தைகளை இரவு தூங்கும் வரை அவர்களுக்கு கதை சொல்லலாம். இப்படி செய்வதன் மூலமும் குழந்தைகள் சீக்கிரமாகவே தனியாக தூங்குவதற்கு பழகிக் கொள்வார்கள்.
  • முக்கியமாக குழந்தைகள் தூங்க செல்வதற்கு முன் கண்டிப்பாக பல் துலக்க வேண்டும் என்று சொல்லுங்கள். இது அவர்களின் சிறந்த தூக்கம் மற்றும் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும்.

குறிப்பு : சில குழந்தைகள் தனியாக தூங்க விரும்பினால் கூட பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை. ஆனால் அது தவறு. பெற்றோர்கள் இப்படி செய்வதன் மூலம் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் எதையும் தனித்து அவர்கள் செய்ய முடியாத நிலை வந்துவிடும். எனவே இந்த விஷயத்தில் பெற்றோர்களை கொஞ்சம் கவனமாக இருங்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios