Married: ஆடி மாதத்தில் ஏன் புதுமண தம்பதிகள் ஒன்று சேர கூடாது.! இதுக்கு பின்னால் இவ்வளவு பெரிய ரகசியம் இருக்கா?

First Published Jul 16, 2022, 10:56 AM IST

Aadi Month 2022- Married: புதிதாகத் திருமணம் ஆன தம்பதிகள் ஏன் ஆடியில் பிரிக்கிறார்கள்?  அதற்கான விளக்கம் என்ன என்பது பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

marraige

ஆடி பிறந்தாலே கொண்டாட்டத்திற்கு குறைவு இருக்காது, ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடி பதினெட்டு, ஆடி கிருத்திகை, ஆடி தள்ளுபடி போன்ற விஷயங்களால் நம் அனைவரும் குளு குழு வென இருக்கும். ஆனால், திருமணமான புதுமண தம்பதிகள் எதற்காக அதற்குள் ஆடி பொறந்தது ..? என்று மனதில் ஒருவித குமுறல் இருக்கும்.

 மேலும் படிக்க.....Aadi Month -Sun Transit: இன்று நிகழும் சூரியன் பெயர்ச்சியால்...இந்த ராசிகளுக்கு இன்னும் 30 நாட்கள் பொற்காலம்..

marraige

ஆம், திருமணமான ஜோடிகளின் முதல் ஆடி மாதமாக இருந்தால், பிரித்து வைக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய முன்னோர்களின் வழக்கமாக இருந்தது. ஆனி கடைசி தேதியில் திருமணம் ஆன ஜோடிகளாக இருந்தால், கூட  ஆடி பிறந்தவுடன் முதல் வேலையாக புதுமண தம்பதிகளை நம்முடைய பெற்றோர்கள் பிரித்து வைத்து விடுவார்கள். அப்படி, புதிதாகத் திருமணம் ஆன தம்பதிகள் ஏன் பிரிக்கிறார்கள்?  அதற்கான விளக்கம் என்ன என்பது பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

மேலும் படிக்க...Aadi Month: தமிழ் மாதங்களில் ஆடி மாதம் ஏன் இவ்வளவு முக்கியமானது? அம்மன் மாதத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி அறிக

marraige

ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும், கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதனால் பிறக்கும் பிள்ளைக்கும், பிரசவிக்கும் தாய்க்கும் உடல் நலம் கெடும், அதனால்தான் புதுமணத் தம்பதியர் பிரித்து வைக்கப்படுகிறார்கள் என்று அறிவியல் ரீதியாகவும் காரணம் சொல்லப்படுகிறது. ஆடி மாதம் சிறப்பு பெறுவதுடன், அம்மனுக்கு உகந்த மாதமாகவும் வழிபடப்படுகிறது. இன்று கிரகங்களின் அரசனான சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால், ஆடி மாதம் ஜூலை 17 பிறக்கிறது. எனவே, இந்த மாதத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். 

marraige

எனவே, புது மணத்தம்பதிகள் இந்த மாதத்தில் ஒன்றாகச் சேர்ந்தால், அவர்களுக்கு சித்திரை மாதத்தில் குழந்தைகள் பிறக்கும். அப்போது அக்னி நட்சத்திரம் காரணமாக வெயில் உக்கிரமாக இருக்கும். இதனால் தாய், செய் உடல் நலம் பாதிக்கும் என்பது தான் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், நம்முடைய முன்னோர்களின் கூற்றுப்படி சித்திரையில் குழந்தை பிறந்தால் தகப்பனுக்கு ஆகாது என்று  கூறப்படுகிறது.

 மேலும் படிக்க....Aadi Month 2022: அருள் மழை பொழியும் ஆடி பொறந்தாச்சு....! முதல் நாளில் வீட்டில் அம்மனை தரிசனம் செய்வது எப்படி.?
 

marraige

எனவே, தான் புதுமணத் தம்பதிகள் ஆடி மாதம் தொடங்கியதும் பெண் அவளது பிறந்த வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விடுவது வழக்கமாக உள்ளது. மேலும், ஒரு சில வழக்கத்தில் திருமணமான ஜோடிகளின் முதல் ஆடி மாதமாக இருந்தால், பெண்ணை அவர் பெற்றோரின் வீட்டுக்கு கொண்டு வந்து விடுவார்கள். அந்த நேரத்தில், புதிய ஜோடிகளுக்கு ஆடி ஒன்றாம் தேதி விருந்து வைக்கும் பழக்கமும் உண்டு.

click me!