Aadi Month -Sun Transit: இன்று நிகழும் சூரியன் பெயர்ச்சியால்...இந்த ராசிகளுக்கு இன்னும் 30 நாட்கள் பொற்காலம்..
Suriyan Peyarchi 2022 Palangal: இந்த 2022 ஆண்டின் ஆடி மாதம் ஜூலை 17 பிறக்கிறது. இதற்கு முன்னதாகவே அதாவது இன்று ஜூலை 16ல் கிரகங்களின் அரசனான சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு இன்று ஜாக்பாட் அடிக்கப்போகிறது. உங்கள் ராசிக்கும் அந்த அதிஷ்டம் இருக்கா..? என்பதை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்ள்ளுங்கள்.
suriyan peyarchi 2022
இன்று சூரியன் பெயர்ச்சி 2022:
கிரகங்களின் ராஜாவான சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுகிறார். தற்போது சூரியன் மிதுனம் ராசியில் பயணித்து வருகிறார். இவர் ஜூலை 16, 2022, சனிக்கிழமை அதாவது இன்று இரவு 10.50 மணிக்கு தனது ராசியை மாற்றி சந்திரனின் கடக ராசியில் நுழைகிறார். சந்திரன், கடக ராசிக்கு சொந்தக்காரன் என்பதால், சூரிய பகவான் சந்திரனின் விருந்தினராக அடுத்த ஒரு மாதம் தங்குவார். சூரிய பகவானின் கடக ராசிக்கு செல்லும் நிலையால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கும். அப்படியாக உங்களுக்கு என்ன பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
Suriyan Peyarchi 2022 Palangal:
ரிஷபம்:
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சூரியப் பெயர்ச்சி பல்வேறு நன்மைகளைத் தரும். திடீர் பண வரவு உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த நிதி பிரச்சனை விலகும். தொழிலில் புதிய முன்னேற்றம் இருக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். மொத்தத்தில் இந்த சூரிய பெயர்ச்சி, அதிர்ஷ்டங்களை அள்ளிக் கொடுத்து, வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு முடிவுகளை தரும்.
Suriyan Peyarchi 2022 Palangal:
கன்னி:
சூரிய பகவான் மிதுன ராசிக்குள் நுழைவது கன்னி ராசிக்காரர்களின் தொழிலில் சாதகமாக அமையும். இந்த நேரத்தில் புதிய வேலைஉண்டாகும். பதவி உயர்வு பெறுவதற்கான ஏற்ற நேரம் இதுவாகும். உங்கள் பணி சிறப்பாக நடக்கும், வேலையில் உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். மரியாதை அதிகரிக்கும்.
Suriyan Peyarchi 2022 Palangal:
சிம்மம்:
சூரியனின் ராசி மாற்றத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்வில் வருமானம் உயரும். திடீர் பண ஆதாயம் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும். முதலீடு செய்ய ஏற்ற நேரம் இதுவாகும். இந்த நேரம் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும்.