Suriyan Peyarchi 2022: சந்திரனின் வீட்டிற்குள் நுழையும் சூரியன்...இந்த மூன்று ராசிகளுக்கு கெடு பலன் உண்டாகும்
Suriyan Peyarchi 2022 Palangal: சூரியன் நாளை கடக ராசிக்கு மாறுகிறார். சூரியனின் இந்த பெயர்ச்சி காரணமாக வெவ்வேறு ராசிகளில் வெவ்வேறு விளைவுகள் ஏற்படும். குறிப்பாக இந்த மூன்று ராசியினர் இந்த நேரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
suriyan peyarchi 2022
சூரியன் பெயர்ச்சி 2022:
ஜோதிடத்தின் பார்வையில், சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுகிறார். இந்த வழியில், சூரியன் ஆண்டு முழுவதும் 12 ராசிகளிலும் சஞ்சரிக்கிறார். அந்த வகையில், சூரிய பகவான் நாளை கடக ராசிக்குள் நுழைகிறார். ஜூலை 16 இரவு, இரவு 11.11 மணிக்கு பெயர்ச்சியாகிறார். கடகத்தின் அதிபதி சந்திரன். சூரியன் சந்திரனின் வீட்டிற்குள் நுழைவது வெவ்வேறு ராசிகளில் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனால் குறிப்பிட்ட சில ராசிகள் மட்டும் கெடு பலன்களை அனுபவிப்பார்கள். எனவே, அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
suriyan peyarchi 2022
மீனம்:
கடகத்தில் சூரியன் இருக்கும் காலத்தில் மீன ராசிக்காரர்கள் எந்த ஒரு வேலையையும் கவனமாக யோசித்து செய்ய வேண்டும். உங்களுக்கு வேலையில் மனதளவில் குழப்ப நிலை வரலாம். ஆனால் உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம். சில நேரம் நீங்கள் செய்ய முடிக்க வேண்டிய வேலையில் தடை வரலாம். தொழிலில் பிரச்சனை வரலாம். சமாளிக்கும் தைரியத்தை வளர்த்து கொள்ளுங்கள்.
suriyan peyarchi 2022
மிதுனம்:
கடகத்தில் சூரியன் பெயர்ச்சியால் மிதுனம் ராசியில் பிறந்தவர்கள், கவனமாக இருக்க வேண்டும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் வரலாம். வாழ்க்கையில் மகிழ்ச்சி, துன்பம் இரண்டும் வருவதால் எந்த விதமான தனிமையோ அல்லது தாழ்வு மனப்பான்மையோ உங்களுக்கு ஏற்படும். வாழ்வில் மகிழ்ச்சி வரும்போது நன்றாக இருக்கும், அதிக நம்பிக்கையுடன் காத்திருங்கள்.
suriyan peyarchi 2022
கன்னி:
கடகத்தில் சூரியன் பெயர்ச்சியால் கன்னி ராசியில் பிறந்தவர்கள், அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். சிறு பிரச்னை என்றாலும் அதை அலட்சியப்படுத்த வேண்டாம். உடனடியாக வேலைகளை செய்து முடிங்கள்.
அதேபோன்று எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்படுத்துங்கள்.