வெங்காயம் மண்ணுக்கடியில வளரும்போது, அது மண்ணுல இருக்குற கந்தகச் சத்துக்களை (sulphur) உறிஞ்சி தன்னோட செல்களுக்குள்ள சேமிச்சு வைக்குது. நாம வெங்காயத்தை நறுக்கும்போது, அந்த செல்கள் உடைஞ்சு, அதுல இருந்து என்சைம்களும், கந்தகச் சேர்மங்களும் (sulphur compounds) வெளியில வருது. இந்த ரெண்டும் ஒண்ணு சேர்ந்து ஒரு வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்துது. இதுல இருந்து 'சின்-புரோபனேதியல் எஸ்-ஆக்சைடு' (syn-propanethial S-oxide) அப்படின்ற ஒரு வாயு உருவாகுதுங்க.
இந்த வாயு காத்துல பரவி நம்ம கண்ணுக்குள்ள போயிடும். நம்ம கண்ணுல இருக்கிற ஈரப்பதத்தோட இந்த வாயு கலக்கும்போது, அது லேசான சல்ஃபியூரிக் அமிலமா மாறுது. நம்ம கண்கள் ரொம்ப உணர்வுத்திறன் கொண்டது இல்லையா? இந்த அமிலம் கண்களை எரிச்சலூட்டி, கண்ணீர் சுரப்பிகளைத் தூண்டுது. அதனாலதான் கண்ணுல இருந்து தண்ணி கொட்டுது.
இந்த கண்ணீர்ப் பிரச்னையில இருந்து தப்பிக்க சில சுலபமான வழிகள் இருக்கு. இதைப் பின்பற்றிப் பாருங்க, இனி வெங்காயம் நறுக்கும்போது அழத் தேவையில்லை!