Ant Mill: நீண்ட நாட்கள் வட்டமடித்து மரணிக்கும் எறும்புகள்.! வினோத நிகழ்வுக்கான காரணம் என்ன?

Published : Jun 24, 2026, 11:07 AM IST

Ant Mill: இயற்கையின் விசித்திரங்களில் ஒன்று 'Ant Mill'. இதில் நூற்றுக்கணக்கான எறும்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வட்டமடித்து, சோர்வடைந்து இறக்கும் வரை சுற்றிக்கொண்டே இருக்கும். இந்த வினோத நிகழ்வுக்கான காரணம் என்ன?

PREV
15
எறும்புகளின் விசித்திரமான நடத்தை

இயற்கையில் நடக்கும் பல விசித்திரங்களில் 'Ant Mill'-ம் ஒன்று. பொதுவாக, எறும்புகள் உணவு தேட ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாகச் செல்லும். ஆனால் சில சமயங்களில், நூற்றுக்கணக்கான எறும்புகள் ஒரே பாதையில் வட்டமடிக்கத் தொடங்கும். இந்த நிகழ்வு பல மணிநேரம் நீடிக்கும். இறுதியில், சோர்வினால் சில எறும்புகள் இறந்துவிடும். இவ்வளவு புத்திசாலித்தனமான எறும்புகள் ஏன் இப்படிச் செய்கின்றன என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தும்.

இதையும் படியுங்கள்:  அமெரிக்காவில் மக்கள் கேஸ் சிலிண்டர் வாங்குறதே இல்ல.! அவங்களுக்கு எப்படி சமையல் எரிவாயு கிடைக்குது தெரியுமா?

25
Ant Mill-க்கான காரணம் என்ன?

எறும்புகளின் வாசனை அறியும் திறன்தான் 'Ant Mill' உருவாக முக்கிய காரணம். எறும்புகள் பயணிக்கும்போது, தங்கள் உடலில் இருந்து 'ஃபெரோமோன்கள்' (Pheromones) என்ற ரசாயன வாசனையை வெளியிடுகின்றன. மற்ற எறும்புகள் அந்த வாசனையைப் பின்தொடர்ந்து செல்கின்றன. எறும்புகள் உணவைத் தேடி வரிசையாகச் செல்லும்போது, முன்னால் செல்லும் தலைமை எறும்பு ஏதேனும் ஒரு தடையினாலோ அல்லது திசைமாற்றத்தினாலோ தன் பாதையை இழந்து ஒரு வட்ட வடிவிற்கு மாறுகிறது. 

இதையும் படியுங்கள்:  அமெரிக்காவில் கரண்ட் ஒயர்கள் ஏன் வெளியில் தெரிவதில்லை? இந்தியாவில் இது சாத்தியமா?

35
மரணத்திற்க்கான காரணங்கள் என்ன?

ஒவ்வொரு எறும்பும் தனக்கு முன்னால் உள்ள எறும்பைப் பின்தொடர்வதால், அந்த வட்டத்தை விட்டு வெளியேறும் வழியை அவற்றால் கண்டுபிடிக்க முடிவதில்லை. இந்த எறும்புகள் தங்களின் தவறை உணராமல், உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தொடர்ந்து பல மணி நேரமோ அல்லது நாட்களோ அந்த வட்டத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கின்றன. இறுதியில் மாரடைப்பு அல்லது கடுமையான சோர்வு காரணமாக ஒவ்வொன்றாக மடிந்து போகின்றன.

இதையும் படியுங்கள்:  அமெரிக்க வீடுகள்ல ஏன் மொட்டை மாடில தண்ணி டேங்க் இல்ல? என்ன காரணம் தெரியுமா?

45
சோர்வினால் மரணம்

ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால் அமெரிக்க இயற்கை ஆர்வலர் வில்லியம் பீபி என்பவர் 1921-ல் சுமார் 1,200 அடி சுற்றளவு கொண்ட ஒரு பிரம்மாண்ட எறும்பு சுழலைக் கண்டறிந்தார். அதில் இருந்த எறும்புகள் ஒவ்வொன்றும் ஒரு சுற்றை முடிக்க இரண்டரை மணி நேரம் எடுத்துக்கொண்டன. அவை தொடர்ந்து 2 நாட்கள் சுற்றிக் கொண்டே இருந்து, பெரும்பாலான எறும்புகள் மடிந்து போயின.

இதையும் படியுங்கள்:  ரயில் தண்டவாளத்தின் நடுவில் ஜல்லிக்கற்கள் ஏன் கொட்டப்படுது? இதன் பின்னால் உள்ள அறிவியல் தெரியுமா?

55
இதிலிருந்து எறும்புகள் தப்பிக்கவே முடியாதா?

பொதுவாக இந்த சுழற்சியில் மாட்டிக்கொள்ளும் பெரும்பாலான எறும்புகள் இறந்துவிடுகின்றன. ஆனால், சில அரிதான சமயங்களில், ஏதேனும் ஒரு விபத்தினால் அந்த வட்டத்தில் ஒரு சிறிய உடைப்பு ஏற்பட்டாலோ அல்லது தற்செயலாக சில எறும்புகள் அந்த வாசனையைத் தாண்டி வேறு பக்கமாகப் பிரிந்து சென்றாலோ, அந்தப் புதிய பாதையை மற்ற எறும்புகள் பின்தொடர்ந்து ஒட்டுமொத்தக் கூட்டமும் தப்பிக்க வாய்ப்பு உண்டு. விலங்குகளின் நடத்தை எவ்வளவு ஆச்சரியமானதோ, அதே அளவுக்குச் சில நேரங்களில் அது எப்படி அவற்றுக்கே ஆபத்தாக முடிகிறது என்பதற்கு இந்த 'Ant Mill' ஒரு சிறந்த உதாரணமாகும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories